அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை பறித்த மண் சரிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ரேங்கல் பகுதியில் ஒரு தம்பதியும் அவர்களின் 3 பிள்ளைகளும் வீட்டில் இருந்தபோது நிலச்சரிவு நேர்ந்தது. பெற்றோர், மூத்த பிள்ளை ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இளைய பிள்ளைகளையும் அவர்களின் அண்டை வீட்டுக்காரர் ஒருவரையும் இன்னும் காணவில்லை என்று அலாஸ்கா பொதுப் பாதுகாப்புத் துறை கூறியது. அந்தப் பிள்ளைகளில் ஒருவர் 12 வயதுடையவர் […]