பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56 மத குருமார்கள் சிறையில்! வெளியான அதிர்ச்சி தகவல்
கொலை, பலாத்காரம், பாரிய பாலியல் துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் புதையல் தோண்டல் ஆகிய குற்றச்சாட்டில் 56 மதகுருமார்கள் சிறையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயரத்ன மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து மதகுருமார்கள், 02 மௌலவிகள் […]