இலங்கை

தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் அறிவிப்பு!

  • November 30, 2023
  • 0 Comments

சம்பள உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒக்டோபர் 23ஆம் திகதி கூடிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் துறைமுக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டது. இதனால் துறைமுக ஊழியர்கள் மத்தியில் ஊதிய உயர்வு குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினார். […]

பொழுதுபோக்கு

ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்… அட இத்தன இருக்கா?

  • November 30, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதேநேரம் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 படங்களில் இருந்து மாஸ் அப்டேட் வெளியாகவுள்ளதாம். லால் சலாம், தலைவர் 170 என 2 படங்களையும் லைகா […]

இலங்கை

சீசெல்ஸ் நாட்டின் நீதியரசராக இலங்கையர் ஒருவர் பதவியேற்பு!

  • November 30, 2023
  • 0 Comments

சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்களில் ஒருராக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ் பாலகி என்பவரும் இலங்கையைச் சேர்ந்த ஜனக் டி சில்வா உள்ளிட்ட இருவருமே நீதியரசராக பதிவியேற்றுள்ளனர். பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட நீதிபதி ஜனக் டி சில்வா தமது நாட்டிற்கு வெளியே வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக இதனை தாம் பார்ப்பதாக  கூறியுள்ளார். ஜனக் டி சில்வா இலங்கையின் […]

இலங்கை

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

  • November 30, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்கு  படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட எட்டு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை தென்னிந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினர் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்த போது தங்கம் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கடலோர காவல்படையினர் படகை நிறுத்த உத்தரவிட்ட போதும், அந்த உத்தரவை மீறி சந்தேகநபர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.  கைவிடப்பட்ட படகில் உரிய தங்க கையிருப்பு இருந்ததை கண்டுபிடிக்க முடிந்தது. கைப்பற்றப்பட்ட தங்கம் நீதிமன்ற நடவடிக்கைக்காக […]

ஐரோப்பா

ஜெருசலேமில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!

  • November 30, 2023
  • 0 Comments

ஜெருசலேமில் இன்று (30.11) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு பாலஸ்தீன ஆயுததாரிகள் பேருந்து நிலையத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் விரைவாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து தாக்குதல்தாரிகளை கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

கேரள முதல்வர் கண்ணில் குத்திய NCC மாணவர்… அரசு விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

  • November 30, 2023
  • 0 Comments

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் NCC மாணவர் அணிவகுப்பு நடையில் செல்ல முயன்றபோது அவரது கை முதல்வரின் கண்ணில் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில், மாநில அமைச்சர், முதல்வர் தொகுதிகளில் ஆய்வு செய்யும் நவ கேரள சதாஸ் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், NCC மாணவர்கள் மேடைக்கு வந்து முதல்வருக்கு சல்யூட் அடித்து புத்தகம் வழங்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஒரு NCC மாணவர், முதல்வர் பினராயி […]

பொழுதுபோக்கு

“இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்….” கொச்சையாக பேசி சிக்கலில் சிக்கிய விஷால்

  • November 30, 2023
  • 0 Comments

நடிகர் விஷால், பல பேர் முன்பு… “ஸ்ரீ ரெட்டியை தடவி இருப்பேன்” என கொச்சையாக பேசியதற்கு, பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் இரண்டாவது மகனான விஷால், திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் உதவி இயக்குனராக மாறினார். இதைத்தொடர்ந்து, ‘செல்லமே’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, ஹீரோவாக மாறினார். ‘செல்லமே’ திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில், இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம், […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீடிக்க நடவடிக்கை!

  • November 30, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வரை நீடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதேவேளை, நேற்று (29.11) காசாவில் 10 இஸ்ரேலியர்களையும் 04 தாய்லாந்து நாட்டவர்களையும் ஹமாஸ் விடுதலை செய்திருந்தது. இதனிடையே, இஸ்ரேல் – ரஷ்ய குடியுரிமை பெற்ற இரண்டு பெண்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் இஸ்ரேலில் தடுத்து […]

இலங்கை

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிறுவர்களே அதிகளவில் நாடுகடத்தப்படுவதாக தகவல்!

  • November 30, 2023
  • 0 Comments

இலங்கையில்  இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (30.11) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த 13 குழந்தைகளும் மலேசியா சென்று வேறு நாடுகளுக்கு விற்கப்பட்ட செய்திதான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான் […]

இலங்கை

வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் தம்பதியினர் வெட்டிக்கொலை!

  • November 30, 2023
  • 0 Comments

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில், அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை வியாபார […]