இலங்கை

வாழைச்சேனையில் 2,500 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரிடம் சிக்கிய வியாபாரி ஒருவர்!

  • November 30, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஒருவரை வாழச்சேனை பிரண்டாரச்சேனை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்யும் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அவரிடம் 2,500 போதைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். காரில் பயணித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் […]

இந்தியா

ஏர் இந்தியா விமானத்திற்குள் ஒழுகிய மழை நீர் – அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!(வீடியோ)

  • November 30, 2023
  • 0 Comments

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தில் மழைத் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏர் இந்தியா போயிங் B787 ட்ரீம்லைனர் விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து கேபினுள் மழைத்தண்ணீர் கசிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. […]

பொழுதுபோக்கு

இறுதிக்கட்டம் ‘துருவ நட்சத்திரம்’ வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை

  • November 30, 2023
  • 0 Comments

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் 5 வருடங்களுக்கு பிறகு கடந்த 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடியாததாலும், கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையாலும் படம் வெளிவரவில்லை. தற்போது வருகிற 8ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் […]

இலங்கை

மட்டக்களப்பு – விவேகாந்தபுரம் மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

  • November 30, 2023
  • 0 Comments

2019மே 19ஆம் திகதிக்கு முன்னர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஒழுக்கத்தினை கற்றுக்கொடுக்கும் பகுதியாக படுவான்கரையிருந்தது.ஆனால் இன்று அதற்கு மாறான நிலையே காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.இன்று வடகிழக்கில் போதைவஸ்து போன்ற பல்வேறு விடயங்கள் சமூகத்தினை சீரழிவு நிலைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகாந்தபுரம் பகுதியினை மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக […]

இலங்கை

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில்  தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

  • November 30, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறைபகுதியைச் சேர்ந்த ஒருவரையுமே யாழ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் கடந்த மூன்று […]

இலங்கை

மலையகம் -200 “யாழில் மலையகத்தை உணர்வோம்” நிகழ்வு ஆரம்பம்

மலையகம் -200 “யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று ஆரப்பமானது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகாயுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் மூன்றாம் திகதிவரை இடம்பெற இருக்கிறது. யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வின் இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ், முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், கண்டி சமூக அபிவிருத்தி […]

வட அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் சர்ச்சை மனிதர் தன்100ஆவது வயதில் காலமானார்!

  • November 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் Henry Kissinger, தனது 100 ஆவது வயதில் காலமானார். ஹிசிஞ்சர் நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான சர்ச்சைக்குரிய பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார். 1923 ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹிசிஞ்சர் அவரது குடும்பத்தினர் ஜேர்மனியிலிருந்து தப்பியோடியவேளை அமெரிக்காவிற்கு சென்றார். 1943இல் அமெரிக்க பிரஜையான அவர் பின்னர் அமெரிக்க இராணுவத்திலும் புலனாய்வு பிரிவிலும் பணியாற்றியிருந்தவர் […]

இலங்கை

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

  • November 30, 2023
  • 0 Comments

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். ஏறக்குறைய  900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத அளவிற்கு குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நிஷாந்த அனுருத்த வீரசிங்க,  சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று பிரிண்டர்கள் கடந்த திங்கட்கிழமை தமக்கு கிடைத்ததாகவும், அதன்படி இந்த வாரத்தில் இருந்து […]

இலங்கை

நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று யாழ்.தீவு பகுதிகளுக்கான விஐயத்தின்போது நயினா தீவுக்கு சென்றுள்ளார். நயினா தீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தியுள்ளார். இதன்போது உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் […]

இலங்கை

ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று முன்தினம்(28) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கிய15 வயது சிறுவனின் சடலம் . மீட்கப்பட்டுள்ளது. செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உள்ளிட்ட 5 பேர் நண்பர்கள் கடலில் நீராடச் சென்றுள்ளனர். சடலம் இன்று மாலை 7.00 மணியளவில் கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் – கரைக்கு எடுத்து வந்ததுடன் , சடலம் ஏறாவூர் ஆதார […]