அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp வெளியிட்ட அசத்தல் அம்சம்!

  • December 3, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் […]

இலங்கை

இலங்கையில் பாதாள உலக குழுக்களை ஒடுக்க தயாராகும் பொலிஸார்!

  • December 3, 2023
  • 0 Comments

இலங்கையில் பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு தெளிவான வேலைத்திட்டமும் திட்டமும் இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர், இதன் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம் என தெரிவித்தார். நேற்று காலை தலதா மாளிகையை வழிபட வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொழுதுபோக்கு

‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியானது

  • December 3, 2023
  • 0 Comments

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் ‘ஃபைட் கிளப்’. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பனிப்புயல் – ரயில், விமான சேவைகள் முடக்கம்

  • December 3, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் முனிச் நகரில் தொடர்ந்து வீசிவரும் பனிப்புயல் காரணமாக, நேற்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தெற்கு ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் முனிச் விமான நிலையத்தில் இன்று காலை 6 மணி வரை விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி தேங்கியுள்ளதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. முனிச் மற்றும் உல்ம் நகரங்களில் ரயில் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை!

  • December 3, 2023
  • 0 Comments

ஸ்பெயின் தற்போது போக்குவரத்து துறையில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது மற்றும் இந்த சிக்கலை தீர்க்க கூடுதல் வெளிநாட்டு ஓட்டுனர்களை தீவிரமாக நாடுகிறது. இருப்பினும், வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கான சில அதிகாரத்துவ நடைமுறைகள் இன்னும் உள்ளன, இந்த காரணத்திற்காக, அரசாங்கம் அதன் தற்போதைய விதிகளில் சில மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக வெளிநாட்டு ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது. தரவு காட்டுவது போல், ஸ்பெயினில் போக்குவரத்து நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதிக […]

விளையாட்டு

கோலி தொடர்பில் லாரா நெகிழ்ச்சி

  • December 3, 2023
  • 0 Comments

2023 உலகக் கோப்பையில் வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் ஜொலித்த விராட் கோலி, 11 போட்டிகளில் விளையாடி 95.62 சராசரியில் 765 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதுமட்டுமல்லாமல் 50 ODI சதங்களை எட்டி சச்சினின் உலகசாதனையை முறியடித்த அவர், ஒரு உலகக் கோப்பைப் பதிப்பில் அதிக ரன்களை பதிவுசெய்து உலகத்திற்கே முன்மாதிரி கிரிக்கெட்டராக ஜொலித்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ​​பிரையன் லாரா, விராட் கோலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்!

  • December 3, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை பகுப்பாய்வு செய்தது மற்றும் அதிக ஊதியம் மற்றும் அதிக தேவை உள்ள மொழிகள் பற்றிய ஆய்வை நடத்தியது. இதன்படி, அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் வெளிநாட்டு மொழியாக போர்த்துகீசியம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் ஆங்கிலம் பேசுபவர்களை விட போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய […]

செய்தி

சிங்கப்பூர் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

  • December 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ரயில் கதவை பலவந்தமாக திறக்க முயற்சித்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளியில் பயணி ஒருவர் ரயில் கதவு மூடுவதைத் தடுக்க முயற்சி செய்வதைப் பார்க்கமுடிகிறது. ரயில் நகர்ந்தபோதும் அவர் கதவுகளைத் திறக்க முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ரயில் ஊழியர்கள் சம்பவத்தைக் கையாள சென்றபோது பயணி ஒத்துழைக்கவில்லை என்று SMRT நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸார் பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • December 3, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சட்டவிரோதமான குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கையானது பாரியளவில் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் மாதம் 16ஆம் திகதி இந்த எல்லை சோதனைகளை அவர் உபயோகித்ததன் விளைவாக இதுவரை காலமும் மொத்தமாக 14 492 பேர் வரையே ஜெர்மன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்தார்கள் என்று தெரியவந்து இருக்கின்றது. கடந்த ஆண்டு அல்லது மாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இது 40.4 சதவீதம் விழுக்காடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆட்கடத்தலில் சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 206 பேர் கைது […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் சிறுவனுக்கு நேர்ந்த கதி – மூவரை தேடும் பொலிஸார்

  • December 3, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக புதன்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுளளது. இந்த தாக்குதலாளிகள் இருவர் அல்லது மூவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசி குறித்த சிறுவனை திணறடித்த தாக்குதலாளிகள், பின்னர் கத்தியினால் சிறுவனைக் குத்தியுள்ளனர். SAMU மருத்துவக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு […]