இலங்கை

யாழில் காணி ஒன்றில் பெருந்தொகையான இராணுவ அங்கிகள் மீட்பு

  • December 4, 2023
  • 0 Comments

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து, கிணற்றினை இறைத்த போது கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர், தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர்.அதனால் அவரது காணிக்குள் இராணுவ அங்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன. இவை யுத்தத்தில் ஈடுபடும் […]

இலங்கை

யூடியூப்பில் பணம் சம்பாதிப்பதற்காக தந்தையொருவர் செய்த மோசமான செயல் : ,இலங்கையில் சம்பவம்!

  • December 4, 2023
  • 0 Comments

இணையத்தில் பணம் தேடுவதற்காக தந்தையொருவர் தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை வலுக்கட்டாயமாக எடுக்க முயற்சித்த சம்பவம் ஒன்று குருநாகல், வெல்லவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையில் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு மோசமான செயலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த நபர் நேற்று (03.12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியலறையில் இருந்த கணவன் மீது மிளகாய் பொடியை வீசிய மனைவி, பின்னர் வாளால் வெட்டி […]

பொழுதுபோக்கு

50ஆவது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு – கசிந்த தகவல்

  • December 4, 2023
  • 0 Comments

பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தின் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கி தனது பாடி லாங்குவேஜ் பக்காவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிப்பதற்கு சிம்பு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே […]

ஐரோப்பா

அழகுப்பொருளாக கருதி வீட்டுத்தோட்டத்தில் பிரித்தானிய தம்பதியர் வைத்திருந்த பொருள்: பொலிசார் குவிந்ததால் பரபரப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

அழகுப் பொருளாக கருதி, ஒரு பிரித்தானியத் தம்பதியர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பொருளை பத்திரமாக வைத்திருந்தார்கள்.ஆனால், திடீரென பொலிஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வீட்டை சுற்றிவளைக்க, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்கள். வேல்ஸிலுள்ள Pembrokeshire என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த Sian மற்றும் Jeffrey Edwards (77) என்னும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டுத் தோட்டத்தில், நீண்ட காலமாக, வெடிக்காத ஒரு வெடிகுண்டை அழகுப்பொருள் போல பத்திரமான வைத்திருந்திருக்கிறார்கள்.ஆனால், கடந்த புதன்கிழமை திடீரென பொலிசார் ஒருவர் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். […]

உலகம்

துருக்கியில் வலுவான நிலநடுக்கம் பதிவு : அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

  • December 4, 2023
  • 0 Comments

வடமேற்கு துருக்கியில் இன்று (04.12) மிதமான வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் அச்சத்தில் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புர்சா மாகாணத்தில் உள்ள ஜெம்லிக் நகருக்கு அப்பால் உள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாக பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது. இஸ்தான்புல் மற்றும் அதன் அருகிலுள்ள […]

ஆசியா

இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடிப்பு : 11 பேர் பலி!

  • December 4, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் உள்ள மராபி எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடித்த எரிமலைக்கு அருகில் ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 12 பேரை காணவில்லை, மீண்டும் சிறிய அளவில் எரிமலை வெடித்ததால் அவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எரிமலை வெடித்தபோது 75 மலையேறுபவர்கள் அருகில் இருந்தனர், அவர்களில் பலர் கொல்லப்பட்டனர்.

உலகம்

வடக்கு தான்சானியாவில் நிலச்சரிவு : 47 பேர் உயிரிழப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

வடக்கு தான்சானியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தான்சானியாவின் தலைநகர் டோடோமாவிற்கு வடக்கே சுமார் 300 கிமீ (186 மைல்) தொலைவில் உள்ள கடேஷ் நகரத்தில் குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று (03.12) மாலை வரை இறப்பு எண்ணிக்கை 47 ஐ எட்டியது எனவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும்  (04.12) மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு!

  • December 4, 2023
  • 0 Comments

நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியின் கிரிவநெலிய நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து பிரதான வீதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (04) காலை 10.30 மணியளவில் Nortonbridge பகுதியில் பெய்த கடும் மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையின் சாய்வான பகுதியில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்துகின்றனர். வீதியில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை ஓட்டும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை

NPP ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

  • December 4, 2023
  • 0 Comments

பல கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

காண்போரை கண் கலங்க வைக்கும் “கண்ணகி”… டிரைலர் பாருங்கள்…

  • December 4, 2023
  • 0 Comments

யஸ்வந்த் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கண்ணகி. வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. திருமணம், விவாகரத்து, லிவிங் ரிலேஷன்ஷிப் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள நிலையில், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளார்கள். கலை, நேத்ரா, நதி, கீதா என்ற நான்கு பெண் […]