புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு; பாகிஸ்தான் எல்லையில் 2.26 பில்லியன் டொலரில் இந்தியா பிரம்மாண்ட திட்டம்!
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உலகிலேயே மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் சோலார், காற்றாலை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் உப்புப் பாலைவனத்தில் மிகப் பெரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் […]