மணிப்பூரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்
மணிப்பூரில் மெய்தி, குக்கி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்ததாக மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர். இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக […]