பொழுதுபோக்கு

நடிகர் விஷாலின் பதிவுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி

  • December 5, 2023
  • 0 Comments

சென்னையில் மழை வெள்ளம் குறித்து நடிகர் விஷால் காட்டாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மேயர் பிரியா தரமான பதிலடி கொடுத்துள்ளார். மிக்ஜாங் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்தது. இதனால், தலைநகர் சென்னையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;- புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் […]

ஆசியா

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் நேபாள வீரர்களை நாடு திரும்ப உத்தரவு

  • December 5, 2023
  • 0 Comments

ரஷ்ய படையில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த 6 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு படைவீரர்களை ரஷ்ய ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே பணியாற்றி வரும் நேபாளிகள் அனைவரையும் திருப்பி அனுப்புமாறும் நேபாளம் வலியுறுத்தியுள்ளது. ‘கூர்கா’ என அழைக்கப்படும் நேபாள படைவீரர்கள் தங்களின் வீரம் மற்றும் போர் திறத்துக்குப் பெயர் பெற்றவர்கள். கடந்த 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவப் படையில் நேபாளம் படைவீரர்கள் பணிபுரிய […]

இலங்கை

இலங்கையில் முதன் முறையாக டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வெளியீடு!

  • December 5, 2023
  • 0 Comments

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05.12) வெளியிடப்பட்டது. இதனை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் .அசோக பிரியந்த வெளியிட்டார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க முயன்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி!

  • December 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வீடு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபரைத் தேடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட போது, ​​வீட்டில் இருந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசியா

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • December 5, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (04.12)  6.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் சாட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிலிப்பைன்ஸில் அமைக்காலமாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விஜயகாந்த் நலம்பெற விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்…

  • December 5, 2023
  • 0 Comments

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர். திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் […]

இலங்கை

இலங்கையில் கல்வித் திட்டத்தில் மாற்றம் : தொழில்சார் பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை!

  • December 5, 2023
  • 0 Comments

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்களை வெளியிடும் போது, ​​பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பள்ளியை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும். முன்பள்ளிக் கல்வியானது 4 வயது வரையிலும், முதன்மைப் பிரிவு 1-5, ஜூனியர் பிரிவு 6-8 மற்றும் மூத்த பிரிவு 9 முதல் 12 வரையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பஹா புலமைப்பரிசில் பரீட்சைக்கு பாடசாலை […]

ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் பலி!

  • December 5, 2023
  • 0 Comments

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குலில் , முஸ்லிம் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டு காயமுற்றனர் என்று உள்ளூர் அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். ​நைஜீரியாவின் ஆயுதப் படைகள் நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கில் 14 ஆண்டுகளாக ஜிஹாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடுனா மாநிலத்தில் துடுன் பிரி கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த தகவல்களை அல்லது […]

தமிழ்நாடு

கோவையில் குப்பைத் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: மக்கள் அதிர்ச்சி!

  • December 5, 2023
  • 0 Comments

கோவையில் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கம் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகளை சேகரித்த போது, அதிலிருந்த பிளாஸ்டிக் பை ஒன்று வித்தியாசமாக இருந்ததால், பணியாளர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அதனை திறந்து பார்த்த போது, உள்ளே 2 மனித […]

உலகம்

கலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • December 5, 2023
  • 0 Comments

கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் புல்லர்டனில் மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்கடர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக   அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் அனாஹெய்மிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவாகவும், பிளாசென்டியாவிலிருந்து ஒரு மைல் தொலைவிலும், ப்ரியாவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலும், லா ஹப்ராவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.