பொழுதுபோக்கு

ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை வளைத்துப்போட்ட ‘வி’ நடிகர்… கோலிவுட்டில் கிசு.. கிசு..

  • December 5, 2023
  • 0 Comments

‘வி’ நடிகர் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை தனது கன்ட்ரோலில் வைத்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த நடிகர் எப்படியாவது சினிமாவில் வென்று விட வேண்டும் என தவமிருந்தவர். பல ஆடிஷன்களுக்கு சென்று சின்ன சின்ன ரோல்களில் தலைக்காட்டிக்கொண்டிருந்தார். இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரிடம் படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் தலை காட்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே தனது திரை பயணத்தை தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஸ்வீட் இயக்குநர் இவரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை […]

ஆசியா

மராபி எரிமலை வெடிப்பு : 09 பேரின் உடல்கள் கண்டுப்பிடிப்பு!

  • December 5, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக மீட்பு நிறுவன அதிகாரிகள் இன்று (05.12) அறிவித்துள்ளனர். எரிமலை வெடிப்பில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 75 பேரில்  10 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 09 பேரின் உடல்கள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.  சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை கடந்த ஞாயிறன்று வெடித்தது.

ஐரோப்பா

பிரான்ஸில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடைவிதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்!

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸின் தேசிய சட்டமன்றம்  ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடை செய்யும் மசோதாவிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பில் நேற்று (04.120 நள்ளிரவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 104 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். குறித்த  மசோதாவானது செனட் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டப் பின்னர் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்போசபிள் இ-சிகரெட்டுகள் சிறிய, பேட்டரியால் இயங்கும் சாதனங்களாகும். அவை இனிப்பு சுவைகளுக்காக பதின்ம வயதினரிடையே குறிப்பாக பிரபலமாக உள்ளன. அவற்றில் […]

ஐரோப்பா

கிறிஸ்துமஸ் காலத்தில் பெரும் ஆபத்தை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • December 5, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் ஐரோப்பா “பயங்கரவாத தாக்குதல்களின் பெரும் ஆபத்தை” எதிர்கொள்வதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நடந்த ஒரு பயங்கரமான தாக்குதலை தொடர்ந்து பிரெஞ்சு புலனாய்வாளர்கள்  மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளனர். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் மற்றும் அது நமது சமூகத்தில் ஏற்படுத்தும் துருவமுனைப்பு, வரவிருக்கும் விடுமுறை காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான  மிகப்பெரிய ஆபத்து உள்ளது” என்று ஐரோப்பிய ஒன்றிய […]

இலங்கை

மன்னார் – அடம்பன் பொலிஸாருக்கு எதிராக மகஜர் ஒன்றை கையளித்த குடும்பம்!

  • December 5, 2023
  • 0 Comments

மன்னார் குருவில், வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தொடர்ந்தும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (4)மதியம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். குறித்த மகஜரின் பிரதிகள் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான […]

இலங்கை

ஆதிவாசிகளின் பிரச்சினைகளுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு : செந்தில் தொண்டமானின் அதிரடி நடவடிக்கை!

  • December 5, 2023
  • 0 Comments

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைகளுக்கு  24 மணித்தியாலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுத்த செந்தில் தொண்டமான்! மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர். தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித ,விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ஆதலால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனவும், […]

ஐரோப்பா

ஹமாஸ் தலைவரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நடவடிக்கை!

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் இன்று (05.12) ஹமாஸ் காசா தலைவர் யாஹ்யா சின்வார் மீது சொத்து முடக்கம் விதித்துள்ளது. இஸ்லாமிய குழுவின் சமீபத்திய தலைவர், அதன் தேசிய தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக  நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 13 அன்று பிரான்ஸ் ஹமாஸ் இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் மற்றும் அவரது துணைத்தலைவர் மர்வான் இசா மீது தேசிய அளவில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் மட்டத்தில் ஹமாஸ் தனிநபர்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

நிலைமை மோசமா இருக்கு….. யாரும் உதவ வரல; சிக்கித்தவிக்கும் விஷ்ணு விஷால்

  • December 5, 2023
  • 0 Comments

தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இன்று மழை ஓய்ந்துள்ளதால் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களும் இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று நடிகர் விஷால், தன் வீட்டில் தண்ணீர் புகுந்ததை அடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதேபோல் நடிகர் ரோபோ […]

பொழுதுபோக்கு

மனம் திறந்து ராஷ்மிகா,விஜய் தேவரகொண்டாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் நானி!

  • December 5, 2023
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் நானி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ‘ஹாய் நானா’ திரைப்பட புரோமோஷன் விழாவில் இவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தி புகைப்படம் ஒன்று வெளியானதே இதற்கு காரணம். நடிகர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‘ஹாய் நானா’ திரைப்படம் டிசம்பர் 7ம் திகதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் ‘ஹாய் நானா’ திரைப்படத்தின் புரமோஷன் விழா […]

உலகம்

வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

  • December 5, 2023
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் மிக உயர்ந்த பெறுமதியை பதிவு செய்ய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,111 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதும், அடுத்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை மையமாகக் கொண்ட புவி-அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து […]