இலங்கை

யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடித்து தள்ளிய டிப்பர் வாகனம்

  • August 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர்(52) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பை சந்தி சமிக்ஜை விளக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளதால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக […]

ஆசியா

மியன்மாரில் சுரங்க மண்சரிவில் சிக்கி 30 பேர் மாயம்!

  • August 14, 2023
  • 0 Comments

மியன்மாரில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவினால் குறைந்தபட்சம் 30 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மண்சரிவு மியன்மாரின் வடபகுதி கச்சின் மாநிலத்திலுள்ள, ஜேட் எனும் பச்சைக்கல் சுரங்கமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏரியொன்றுக்கு அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை மியன்மாரில் இதே பகுதியில் 2020ம் ஆண்டு மண்சரிவினால் 162 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் செய்துள்ள முறைப்பாடு!

  • August 14, 2023
  • 0 Comments

கனடாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த தொழிலதிபர் வயது குறைந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான பியூச்சர் எலக்ட்ரானிக்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரதான மீது இவ்வாறு பிரதானியான ராபர்ட் மில்லர் என்பவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்த தொழிலதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிறுவர்களிடம் பாலியல் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த 28 பெண்களுக்கு மேலதிகமாக […]

இலங்கை

வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!

  • August 14, 2023
  • 0 Comments

வவுனியா, தௌசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, ​​மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது. Tom EJC ரக மாம்பழமே இவ்வாறு அதிக விலைக்கு  (95000 ரூபாய்)  விற்பனை செய்யப்பட்டதாக ஆலயத்தின் பிரதான பூசகர் தெரிவித்தார். லண்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி இந்த மாம்பழத்தை வாங்கியுள்ளனர், முன்னதாக ஆகஸ்ட் 2022 இல், 3 மாம்பழங்கள் இவ்வாறாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. எவ்வாறாயினும், இது தொடர்பான […]

இலங்கை

இத்தாலியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் கைது!

  • August 14, 2023
  • 0 Comments

இத்தாலிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதுடைய பெண் சந்தேக நபரால் தரையில் வீசப்பட்டு பூங்காவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அலறியதையும் கேள்விப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு வருகைதந்த நிலையில், […]

பொழுதுபோக்கு

ரஜினி மற்றும் விஜய்யை வைத்து படம் பண்ணப்போகும் நெல்சன்

  • August 14, 2023
  • 0 Comments

பீஸ்ட் திரைப்படம் சறுக்கல்களை சந்தித்த நிலையில், ஒரு சில இடங்களில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் பரவியது. இதனை தொடர்ந்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம், நெல்சன் திலீப் குமாரின் புகழை மீண்டும் உச்சிக்கு கொண்டு சென்று உள்ளது என்றால் அது மிகைஅல்ல. ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறி உள்ளது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் மனோபாலா விஜயபாலன் வெளியிட்டுள்ள தகவலின்படி நெல்சன் திலீப் குமார் தான் இதுவரை இயக்கிய அனைத்து […]

ஆசியா

அச்சுறுத்தலுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் வடகொரியா மிகப்பெரிய கூட்டுப்பயிற்சி

  • August 14, 2023
  • 0 Comments

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றம் வடகொரியா இணைந்து வரும் ஆகஸ்ட் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை மிகப்பெரிய கூட்டுப்போர் பயற்சி நடத்த உள்ளன. அண்மையில் ஆயுத தொயிற்சாலைகளை பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போருக்கு தயாராக இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டரா. வடகொரிய அதிபரின் இந்த உத்தரவை தொடர்ந்து அமெரிக்காவும், தென்கொரியாவும் பல்லாயிரக்கணக்கான வீர்ர்களை கொண்டு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய போர் ஒத்திகை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த போர் பயிற்சி […]

இலங்கை

விரைவில் வெளிவருகிறது புதிய தடுப்பூசி

  • August 14, 2023
  • 0 Comments

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் திரிபான எரிஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், புதிய கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் வெளிவர உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. ஒமிக்ரான் மாறுபாட்டை விட அதிகமாக பரவும் திறன் கொண்டதாக எரிஸ் கருதப்படுவதுடன், இது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களையும் பாதிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் ஏனைய அதிக ஆபத்துள்ள நோயுடைய நபர்களை […]

இலங்கை

சட்டவிரோதமாக போலந்திற்கு செல்ல முயன்ற 160 பேர் கைது!

  • August 14, 2023
  • 0 Comments

பெலாரஸில் இருந்து போலந்துக்கு செல்ல முயன்ற 160 பேரை எல்லைக் காவலர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் நேற்று போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோத எல்லைக் கடப்புகளுக்கு உதவியதற்காக இந்த ஆண்டு ஏற்கனவே 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 2022 இல் இருந்து இந்த […]

செய்தி

இலங்கையில் மருந்து தரப்பரிசோதனையில் 70 இற்கும் மேற்பட்ட மருந்துகள் தோல்வி!

  • August 14, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 73 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 45 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும், 17 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும்,  மற்றவை பாகிஸ்தான், ஜப்பான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, மொத்தம் 35 பேட்ச்கள் Flucloxacillin Cap […]

You cannot copy content of this page

Skip to content