கண்டியில் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்
சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று முன்தினம் கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்று பிற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தனர்.
அன்பிற்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
SDOC-2B7C69311CA9CCCD777A13D9ED11CD9D-12-05-SI