இலங்கை

திருகோணமலையில் ஐஸ் போதை பொருளுடன் கைதான மாயாஜால வித்தைக்காரர்

  • December 6, 2023
  • 0 Comments

திருகோணமலை -கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து அரச பேருந்தில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக பொலிஸ் போதைப் பொருள் திருகோணமலை பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பாலம் போட்டாறு பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 11 கிரேம் 120 மில்லி கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சிறுவர்களை கண்காணிக்க ஏஐ தொழிநுட்பத்தை பயன்படுத்த திட்டம்!

  • December 6, 2023
  • 0 Comments

ஆன்லைனில் ஆபாசப் படங்களை அணுகுவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பிரிட்டன் நேற்று (05.12) புதிய வயது சரிபார்ப்பு வழிகாட்டுதலை முன்மொழிந்துள்ளது. பார்வையாளர் சட்டப்பூர்வ வயதுடையவராகத் தெரிகிறதா என்பதைப் பார்க்க AI- அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளும் இதில்  அடங்கும். அரசாங்கம் புதிதாக இயற்றியுள்ள ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஆபாச உள்ளடக்கத்தைக் காண்பிக்கும் அல்லது வெளியிடும் தளங்களும், ஆப்ஸும் குழந்தைகள் தங்கள் சேவையில் பொதுவாக ஆபாசத்தைப் பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிரிட்டனில் ஆபாசத்தைப் பார்ப்பதற்கான சட்டப்பூர்வ வயது […]

மத்திய கிழக்கு

பிணைக்கைதிகளுக்கு போதை மருந்து புகட்டும் ஹமாஸ்: பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இஸ்ரேல்

  • December 6, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், விடுவிக்கப்படும்போது அவர்கள் மகிழ்வாக தோன்றச் செய்யவும் போதை மருந்தினை ஹமாஸ் புகட்டுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. ”ஹமாஸ் வசமிருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு முன்பாக சிறைப்பிடிக்கப்பட்டவர்களுக்கு குளோனாசெபம் என்னும் போதை போதை மருந்தினை புகட்டி அனுப்புகிறது. இதனால் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும்போது, மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் தோற்றமளிக்கின்றனர்” என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பிரிவின் தலைவரான ஹாகர் மிஸ்ராஹி குற்றம்சாட்டி உள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் – […]

வட அமெரிக்கா

ஹோண்டுராஸில் பேருந்து விபத்து : 11 பேர் உயிரிழப்பு!

  • December 6, 2023
  • 0 Comments

ஹோண்டுராஸில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில், ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகரில் இருந்து 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (05.12) குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 40 பேர் பயணித்த நிலையில்,  11 பேர் உயிரிழந்தாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மீட்பு தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து இது தொடர்பில் […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள செய்தி!

  • December 6, 2023
  • 0 Comments

நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06.12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சகல துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். பழைய முறைப்படி நடப்பதன் மூலம் நாட்டிற்கு நாளைய தினம் இல்லை […]

இலங்கை

சாய்ந்தமருதில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்பு!

  • December 6, 2023
  • 0 Comments

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம். எஸ். முஷாப் என்ற 13 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நேற்றிரவு (05.12) பிரதேசவாசிகள் மதரஸா பாடசாலையை முற்றுகையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த மத்ரஸா பாடசாலையின் முகாமையாளரை கைதுசெய்துள்ளனர். இந்த மரணத்தால் மக்கள் பெரும் […]

இலங்கை

இலங்கையின் தெஹிவளை பகுதியில் கைக்குண்டொன்று மீட்பு!

  • December 6, 2023
  • 0 Comments

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அதன் பாதுகாப்பு அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொலிஸாரின் விசாரணையில் அது கைக்குண்டு […]

இலங்கை

பணி நிமித்தம் தென்கொரியா சென்ற இலங்கையர் உயிரிழப்பு!

  • December 6, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் கடந்த 3ம் தகிதி அதிகாலை நடந்துள்ளதாக தெரியவருகிறது. பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி. கே. ஷெனித் துலாஜ் சதுரங்க  என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவரது மனைவி  மெலனி […]

இலங்கை

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்கள் வழங்க உலக வங்கி இணக்கம்!

  • December 6, 2023
  • 0 Comments

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06.12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டம், மறுமூலதனமாக்கல் மற்றும் மத்திய வங்கியின் திறனைக் கட்டியெழுப்புதலின்  கீழ் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உரிய பிரேரணையை எட்டுவதற்கு அமைச்சர்கள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த […]

பொழுதுபோக்கு

நடிகைக்கு ஐ லவ் யூ மெசேஜ்.. தயாரிப்பாளரை சிக்கலில் மாட்டிவிட்ட நயன்தாரா…

  • December 6, 2023
  • 0 Comments

நடிகைக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி தயாரிப்பாளரை நயன்தாரா சிக்கலில் மாட்டவிட்ட சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் டாப் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அண்மையில் இவர் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, செய்த சில்மிஷம் செய்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதில், நயன்தாரா, […]