வைத்தியசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக ஒருவர் பலி
கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் பழைய மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பரணபட்டிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரஞ்சித் அபேரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். பழைய மதிலை அகற்றிவிட்டு புதிய மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பழைய சுவர் இடிந்து வீழ்ந்த நிலையில் சுவருடன் இடிந்து விழுந்த மண்மேட்டின் கீழ் குறித்த நபர் புதையுண்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக வைத்தியசாலை ஊழியர்களின் உதவியுடன் மண்மேட்டின் கீழ் இருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு […]