திருகோணமலையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையூற்று கிராமத்தில் சிவில் அமைப்புக்களினால் இன்று (06) புதன்கிழமை மாலை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. பாலையூற்று மாதர் சங்க கட்டடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டலும், காணி சட்டங்கள் தொடர்பாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த நிகழ்வில் சிவில் செயற்பாட்டாளர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள் கிராமமக்கள் மற்றும் […]