பொழுதுபோக்கு

கவனம் ஈர்க்கும் லியோ திரைப்படம் – வீடியோ வெளியீடு!

  • August 15, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காட்சியில் நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லியோ திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இலங்கை

12 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

கரவனெல்ல, தெஹியதகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள், 274 விசேட வைத்தியர்கள் மற்றும் 23 அவசர சிகிச்சை நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடித் தீர்வு காணத பட்சத்தில் சுகாதாரத் துறையே கடும் வீழ்ச்சியைச் […]

ஐரோப்பா

வட்டி விகிதங்களை உயர்த்தும் ரஷ்ய மத்திய வங்கி!

  • August 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் மத்திய வங்கி இன்று (08.15) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் இருந்து நாட்டின் நாணயம் அதன் குறைந்த மதிப்பை அடைந்த பிறகு பணவீக்கத்தை எதிர்த்துப் போராடவும் ரூபிளை வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு அவசர நடவடிக்கை இது எனக் கூறப்பட்டுள்ளது. மாஸ்கோ இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதாலும், மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் எரிசக்தி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது. காலப்போக்கில் பொருளாதாரத் தடைகள் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை அழிக்கும் […]

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சனை அணுகிய கமல்ஹாசன்! என்ன காரணம்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதோடு, நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது. பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ரஜினி மற்றும் ‘ஜெயிலர்’ குழுவை பாராட்டி வருகின்றனர், மேலும் சமீபத்திய தகவல்களின்படி உலகநாயகன் கமல்ஹாசனும் அதையே செய்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் கமல் ரிஷிகேஷில் இருக்கும் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு மாபெரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]

இலங்கை

மனுஷ- ஹரின் மீது உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். தங்களுடைய கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டமை மற்றும் தம்மை பாராளுமன்றிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததையடுத்து கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய […]

ஐரோப்பா

ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 35பேர் பலி!

  • August 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 35பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த எரிபொருள் நிரம்பு நிலையத்திற்கும் பரவியது. இதில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 6ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு தீ பரவியது. இவ் விபத்தில் 5பேர் உயிரிழந்ததோடு,115க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 200க்கும் மேற்பட்ட வீர்ர்கள் போராடி […]

உலகம்

எத்தியோப்பியாவில் ட்ரோன் தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு; அவசர நிலை அறிவித்த அரசு!

எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் ஃபானோ எனப்படும் அம்ஹாரா போராளிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்தும், தாக்குதல் நடத்தியும் வருவதாக ராணுவம் குற்றம்சாட்டுகிறது. கடந்த நான்கு மாதங்களாக போராளி குழுவுக்கும், ராணுவத்துக்கும் மத்தியில் தாக்குதல் தொடர்கிறது. இந்த நிலையில், எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலத்தின் ஃபினோட் செலாத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 26 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ஃபினோட் செலாம் […]

இலங்கை

யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திரதின கொண்டாட்டங்கள்

  • August 15, 2023
  • 0 Comments

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் […]

செய்தி

திருகோணமலையில் கடற்படை முகாம் அமைக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது!

  • August 15, 2023
  • 0 Comments

திருகோணமலை கடற்படை முகாமில் பிரெஞ்சு கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர்   உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறானதொரு மையம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும், தற்போது கடற்படையினர்  இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா நீண்டகாலமாக திருகோணமலையில் நிலைகொள்ள விரும்பிய போதிலும், […]

ஆசியா

எல்லை பிரச்சினையை தீர்க்க 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை

  • August 15, 2023
  • 0 Comments

இந்தியா சீனா இடையிலான ராணுவ மட்டத்தில் 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லையில் சீனப்படைகள் குறைப்பதற்காக இந்தியாவின் இடைவிடாத முயற்சியின் ஒருபகுதியாக லடாக்கின் சூசுல் பகுதியில் நேற்று இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தினர். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30மணிக்கு பேச்சுக்கள் நிறைவு பெற்றன. இந்தப் பேச்சு வார்த்தையின் விவரங்கள் ஓரிரு நாளில் கைட்டு அறிக்கையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டொம்பர் மாதம் 9மற்றும் 10ம் திகதிகளில் பிரதமர் மோடி சீன […]

You cannot copy content of this page

Skip to content