நிலத்தகராரில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விஜய் பட வில்லன்!
நிலத்தகராறில் ஆத்திரமடைந்த விஜய் பட வில்லன் தனது பக்கத்து நிலத்துக்கார இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நடிகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியில் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் புபேந்தர் சிங். பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர். தமிழில் நடிகர் விஜய் நடித்த ’பத்ரி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது நினைவிருக்கலாம். இவர்தான் தனது அண்டை நிலத்துக்காரரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]