பேருந்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர்; 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் !
ஈரோடு அருகே நம்பியூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சரவணன் (49) என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார். அப்போது பள்ளி மாணவிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். மாணவிகள் 10 பேரிடம் நடத்துநர் சரவணன் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் […]