பாங்காக்கில் உள்ள பிரபல சந்தையில் தீவிபத்து!
மத்திய பாங்காக்கில் உள்ள பிரபலமான சந்தையில் இன்று (13.12) தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள கட்டிடங்களில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் வைரலாக பரவிவருகின்றது. சந்தை ஒரு பெரிய பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு அலுவலக கட்டிடத்திற்கு இடையே ஒரு தொகுதியில் அமைந்துள்ளது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், பெண் ஒருவர் மாத்திரம் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. […]