இலங்கை

இலங்கையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு!

  • December 17, 2023
  • 0 Comments

அடுத்த வாரம் முதல் வெங்காயத்தின் விலை குறையும் என வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நாட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வெங்காயத்திற்கு பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பா

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் விளாடிமிர் புதின்!

  • December 17, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவில் வரும் மாா்ச் 17ம் திகதி நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் தற்போதைய அதிபா் விளாடிமிர் புதின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும், அவா் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின என்று அந்தச் […]

ஆசியா

சிங்கப்பூரில் சோகம் – தந்தை இறந்தது கூட தெரியாமல் 5 நாள் சடலத்துடன் இருந்த மகன்

  • December 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பிளாக் 25 ஹூகாங் அவென்யூ 3 இல் உள்ள வீட்டில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 14 ஆம் திகதி அன்று காலை 11:20 மணியளவில் 81 வயது முதியவரின் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு அருகில் உடற்குறைபாடு உடைய மகன் ஒருவர் இருந்துள்ளார். தன் தந்தையின் பராமரிப்பை நம்பி வாழ்ந்த மகன், சடலத்துடன் குறைந்தது ஐந்து நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஷின் மின்னிடம் இது பற்றி கூறிய பக்கத்து வீட்டுக்காரர்; அந்த […]

ஐரோப்பா

பிரான்ஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அதிகரிக்கப்படும் சம்பளம்

  • December 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 2024 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பணவீக்கத்தை கணக்கிட்டு தானியங்கி முறையில் அதிகரிக்கும் இந்த அடிப்படை ஊதியம், ஜனவரி 1 ஆம் திகதி 1.13% சதவீதத்தால் அதிகரிக்கிறது. ஒருமணிநேரத்துக்கான அடிப்படை ஊதியம் 11.52 யூரோக்களில் இருந்து 11.65 யூரோக்களாக அதிகரிக்கிறது. இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ஐரோப்பா முழுவதும் பணவீக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 7 தடவைகள் அடிப்படை ஊதியம் அதிகரித்துள்ளமை […]

இலங்கை

இலங்கையில் அடுத்த ஆண்டுக்கான கல்வி முறைமையில் மாற்றம்

  • December 17, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எளிமைப்படுத்தப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தரங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் முப்பது வீதமான பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, […]

ஐரோப்பா

ஸ்பெயினில் கூட்ட நெரிசலை கடுமையான நடவடிக்கை எடுக்க தயராகும் அரசாங்கம்

  • December 17, 2023
  • 0 Comments

ஸ்பெயின் தலைநகர் ஆண்டு இறுதி விடுமுறைகள் நெருங்கி வருவதால் கூட்ட நெரிசலை எதிர்க்கும் முயற்சியில் கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் இரண்டிலும் நெரிசலை ஏற்படுத்துவதால், மாட்ரிட்டில் உள்ள அதிகாரிகள் “கருப்பு நிலை” எச்சரிக்கையை செயல்படுத்தியுள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது ஸ்பெயினுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் நகரத்திற்கு விஜயம் செய்ததால், […]

ஆஸ்திரேலியா

கிறிஸ்துமஸ் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • December 17, 2023
  • 0 Comments

கிறிஸ்துமஸ் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமற்ற காலநிலை நிலவுவதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம். மேலும் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை இருக்கும் என்று நம்பப்படுகிறது. 40 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பல மாநிலங்களில் சுகாதாரத் துறைகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. நியூ சவுத் […]

வாழ்வியல்

குளிர்காலத்தில் அச்சுறுத்தும் இதயப்பிரச்சனை – தவிர்க்க இலகு வழிமுறைகள்

  • December 17, 2023
  • 0 Comments

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள் ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் […]

விளையாட்டு

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டது ஏன்.?

  • December 17, 2023
  • 0 Comments

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது […]

வட அமெரிக்கா

உச்சவரம்பை எட்டிய அமெரிக்க எச்-1பி விசா விண்ணப்பங்கள்!

  • December 17, 2023
  • 0 Comments

எதிர்வரும் 2024-ம் நிதியாண்டிற்கான அமெரிக்க எச்-1பி விசாவுக்கான உச்சவரம்பை எட்டுவதற்கு தேவையான அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட சிறந்த திறமையாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிய வசதியாக, அந்நாட்டு அரசால் குடியுரிமை அல்லாத எச்-1பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அரசு எச்-1பி விசா விதிகளில் திருத்தம் கொண்டு வந்த பிறகு, அதன் ஆண்டு வரம்பு 65,000 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் […]