இந்தியா

‘ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’: தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை கொடுக்கும் மசோதாவிற்கு உடனடியாக ஸ்டாம்ப் ஒட்ட முடியாது ஒரு மசோதா ஆளுநர் கையில் இருந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு, புதிய கல்விக் கொள்கையில் இருந்து பிட் அடித்து காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என தமிழிசை காட்டமாக விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் உலகத்துக்கு வருவது எனக்கு […]

ஆசியா

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 08 பேர் கைது!

  • August 26, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ISIS மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் அந்நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனங்களால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (CTD) இன்றைய (26.08) தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CTDயின் கூற்றுப்படி, மாகாணத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் 74 உளவுத்துறை பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதன்போது ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் […]

இலங்கை

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

  • August 26, 2023
  • 0 Comments

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனையடுத்து குறித்த விலை உடனடியாக அமலுக்கு வரும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (25.08)  இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதுடன், உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை

மன்னார்- முள்ளிக்கண்டல் பகுதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

  • August 26, 2023
  • 0 Comments

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரிகைகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) இடம் பெற உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (42) 3 பிள்ளைகளின் தந்தை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த […]

இலங்கை

தனது தாயைப் பார்க்க விடுமுறை அளிக்கப்படாததால் பொலிஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு!

ஆராச்சிகட்வா பகுதியில் உள்ள பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பார்க்க விடுமுறை அளிக்கப்படாததால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறியுள்ளார். பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுப்பு எடுக்காமல் கடமையாற்றியதாகவும், தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்த போதும் விடுமுறை வழங்கப்படவில்லை எனவும் பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார். பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி […]

வட அமெரிக்கா

அமெரிக்கா- காதலி சுட்டு கொன்று விட்டு கூலாக ஷாப்பிங் செய்த சீக்கிய வாலிபர்…!

  • August 26, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர் (29) ஒருவர் தனது காதலியுடன் (34) தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார். இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில், சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை […]

இந்தியா

மதுரை நோக்கி சென்ற ரயிலில் தீவிபத்து – 10 பேர் பலி!

  • August 26, 2023
  • 0 Comments

ஆன்மீக சுற்றுலா சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்  20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில்  தமிழகத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயிலிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இடம்பெறும்போது ரயில் பெட்டியில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணித்த யாத்திரிகர் ஒருவர் சட்டவிரோதமாக வைத்திருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு […]

பொழுதுபோக்கு

மணிகண்டனின் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

  • August 26, 2023
  • 0 Comments

வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, ‘பருத்திவீரன்’ சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் […]

இலங்கை

இலங்கை தயாரித்த ”Elektrateq” முச்சக்கர வண்டி அறிமுகம்!

இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான Vega Innovation, Elektrateq என்ற புதிய மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய tuk-tuks போலல்லாமல், Elektrateq பல்துறை பயன்பாட்டை வழங்குகிறது, தினசரி சவாரி, சிறு வணிக வாகனம், சரக்கு போக்குவரத்து அல்லது டாக்ஸி என இதன் பயன்பாடு உள்ளது . இது ஒரு மணி நேரத்தில் 80% பேட்டரி திறனை எட்டக்கூடிய விரைவான சார்ஜிங் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் தகவல்களைப் பெறலாம் https://elektrateq.com/ என்னும் இணையத்தளம் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

இலங்கை

லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான வேன்!

  • August 26, 2023
  • 0 Comments

ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துல வால்ட்ரம்வத்தைக்கு அருகில் நேற்று (25.08) மாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் வேனின் சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன், திக் ஓயா நகரில் […]

You cannot copy content of this page

Skip to content