March 20, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா

மொஸ்கோவிற்கு அருகே ஆளில்லா விமானத் தாக்குதல்!

  • December 19, 2023
  • 0 Comments

மொஸ்கோவிற்கு அருகே ஒரு ஆளில்ல விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  Vnukovo மற்றும் Domodedovo, விமான நிலையங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள கலுகா நகரின் விமான நிலையத்தின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி RIA செய்தி நிறுவனம், விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குவதை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை ரஷ்யா வெளியிடவில்லை. ஆனால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைனை காரணம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கீரி சம்பாவிற்கு பதிலாக புதிய வகை அரிசி! அமைச்சரவை அனுமதி

தனியார் துறையினரால் கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 50,000 மெற்றிக் தொன் ஜிஆர் 11 அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 20.11.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியின் விலையில் போட்டித் தன்மையை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு விலை அனுகூலத்தை வழங்கும் நோக்கில் இந்த அரிசியின் […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் பாரிய எரிமலை வெடிப்பு: அதிர்ச்சியில் மக்கள்

ஐஸ்லாந்தில் கிரிண்டாவிக் நகருக்கு வடகிழக்கே சுமார் 4 கிமீ தொலைவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நில அதிர்வு நடவடிக்கைகள் நகரை நோக்கி நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலையின் விரிசலின் நீளம் சுமார் 3.5 கிமீ ஆகும், எரிமலைக்குழம்பு வினாடிக்கு சுமார் 100 முதல் 200 கன மீட்டர் வேகத்தில் பாய்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் முந்தைய வெடிப்புகளை விட இது பல மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக […]

பொழுதுபோக்கு

இலங்கைக்கு சென்ற ஒரே காரணத்தால் நடிகை அசினுக்கு நடந்த மிகப் பெரிய கொடுமை…

  • December 19, 2023
  • 0 Comments

நடிகை அசின் தற்போது சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகி இருக்கிறார். அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இன்று வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அசின் சினிமா வாழ்க்கையில் சரியான முடிவை எடுத்து இருந்தால் இன்று த்ரிஷா மற்றும் நயன்தாராவை ஓரம் கட்டி முதலிடத்தில் இருந்திருப்பார். விஜய், அஜித், சூர்யா, கமலஹாசன் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் கமிட் ஆகி த்ரிஷாவை ஓரம் கட்டினார் அசின். கஜினி […]

ஐரோப்பா

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான இளவரசி டயானாவின் உடை!

  • December 19, 2023
  • 0 Comments

இளவரசி டயானாவின் உடை ஏலத்தில் எதிர்பார்த்ததை விட 11 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பாலேரினா-நீள மாலை ஆடையை மொராக்கோ-பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர் ஜாக் அசகுரி வடிவமைத்த ஆடையே இவ்வாறு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. ஜனவரியில் இளவரசி டயானாவின் 1991 ஆம் ஆண்டு வெல்வெட் கவுனை விக்டர் எடெல்ஸ்டீன் விற்பனை செய்ததன் மூலம் பெறப்பட்ட $604,800 ஐ விட இம்முறை அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்படுகிறது.  

உலகம்

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: காசாவில் இருப்பதாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.மற்றும் சுமார் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இன்று செவ்வாய் கிழமை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் […]

உலகம்

கினியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து – 13 பேர் பலி!

  • December 19, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகரான கொனக்ரியில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தில் நேற்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொனக்ரியில் நேற்று ஏற்பட்ட எரிபொருள் கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 178 பேரில் 89 பேர் சிகிச்சை பெற்று வீடு […]

இலங்கை

மட்டக்களப்பில் பஸ் சாரதி மீது தாக்குதல்;குற்றவாளிகளை கைது செய்ய கோரி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

  • December 19, 2023
  • 0 Comments

இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துசாலை சாரதி ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.இதன்காரணமாக மட்டக்களப்பு சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவந்த அனைத்து பகுதிக்குமான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். நேற்று மாலை மட்டக்களப்பு பிரதான பஸ்தரப்பு நிலையத்திலிருந்து அம்பிளாந்துறை நோக்கிச்சென்ற பஸின் சாரதி மீது கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.தனியார் பஸ் நடத்துனர் உட்பட நான்கு பேர் இணைந்து இந்த தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் படுகாயமடைந்தவர் […]

இந்தியா

இந்திய நாடாளுமன்றத்தில் 141 உறுப்பினர்களின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

  • December 19, 2023
  • 0 Comments

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் கலந்துகொண்ட 78 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேற்று இடைநிறுத்தப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 49 பேர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே முக்கிய சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.