பொழுதுபோக்கு

அக்கா மகனை வைத்து இயக்கும் தனுஷ்… GV இசையில் 3 பாடல்கள் ரெடி

  • December 18, 2023
  • 0 Comments

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஜனவரியில் வெளியாகிறது. இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய ‘டி50’ படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ‘டி50’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள […]

இலங்கை

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு சம்பவங்கள்: பிரதான குற்றவாளி உட்பட ஐவர் கைது

  • December 18, 2023
  • 0 Comments

வவுனியாவில் வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா பெபேரா இன்று வர்த்தகர் சங்கத்தில் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,வவுனியா நகரில் கண்டி வீதி,பஜார் வீதியில் அண்மையில் வர்த்தக நிலையங்கள் சில உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு நீதிமன்ற நடவடிக்கைக்குட்பட்ட பிரதான குற்றவாளி […]

இலங்கை

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று(18) ஏற்பாடு செய்யப்பட்டது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த விதை உருளைக்கிழங்கு குப்பிளான் பகுதியில் உள்ள களஞ்சியத்தில் இறக்கப்பட்ட நிலையில் குறித்த […]

இலங்கை

முல்லைத்தீவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . முத்துஐயன் கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடி வான் பாய்கிறது. முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை இன்று (18) காலை 9 […]

இலங்கை

கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

  • December 18, 2023
  • 0 Comments

கிளிநொச்சி – கரியாலை நாகபடுவான் குளத்திலிருந்து அதிக நீர் வெளியேறி வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக குறித்த குளம் வான் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் குளத்தை பாதுகாப்பதற்காக, குளத்தின் வால்க் கட்டு படுதி வெட்டப்பட்டும், துருசும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அவதானமாக இருப்பதுடன், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத குளம் […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபரை அதிர்ச்சியில் ஆழ்த்திய விபத்து

  • December 18, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது. டெலவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள பைடன் பிராசாரத் தலைமையகக் கட்டடத்தில் ஊழியர்களுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார். பின்னர் அவர் கட்டடத்திலிருந்து வெளியேறியபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்து ஜனாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகத் பைடனும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு

நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்கள்,உத்தியோகத்தர்கள் வரவேற்றனர். அதனை […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள்!

  • December 18, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (18.120 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது நாம் காண்கின்றோம் கிழக்கு மாகாணத்தில் கல்வி சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் வர வர அதிகரித்துக் கொண்டு செல்கின்றது விசேஷமாக பாடசாலைகளில் அதிபர்கள் நியமனங்களில் பிரச்சினை நிலவுவதை  நாங்கள் காண்கின்றோம். பாடசாலைகளில் அதிபர்களை நியமிக்கிறதான […]

இலங்கை

யாழ் மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி!

  • December 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும்  புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது. மகஜரில், 2019 ஆம் ஆண்டு […]

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும் : சுமந்திரன்!

  • December 18, 2023
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும்- பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று (18.12) அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மாநாடு நடைபெற இருப்பதினால் விழா குழுவாக திருகோணமலை மாவட்ட கிளை செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் எதிர்வரும் […]