வட அமெரிக்கா

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சோகம்!

  • December 24, 2023
  • 0 Comments

நிகரகுவாவில் இன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், 70 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து அங்குள்ள ரன்கோ கிரண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அங்குள்ள மான்செரா ஆற்றுப்பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 […]

ஐரோப்பா

பயங்கரவாதத் தாக்குதல்களின் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் ஐரோப்பா: ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

கொலோன் கதீட்ரலில் பாதுகாப்பு சோதனைகள் பலப்படுத்தப்படடுள்ளன. மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கதீட்ரலில் பார்வையிடும் வருகைகள் தடைசெய்யப்பட்டன, ஆஸ்திரியாவில், வியன்னாவில் உள்ள பொலிசார், தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சந்தைகளைச் சுற்றி பாதுகாப்பை முடுக்கிவிட்டதாகக் தெரிவித்துள்ளனர். தடை இருந்தபோதிலும், நாள் முழுவதும் சேவைகள் நடைபெற்றன. இந்த மிரட்டல் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. விடுமுறை கொண்டாட்டங்களைத் தொடரவும், தேவாலயத்திற்குச் செல்வதை அச்சம் தடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான […]

இலங்கை

யாழ் பல்கலை மாணவி உயிரிழப்பு ;வெளியான மருத்துவ அறிக்கை

  • December 24, 2023
  • 0 Comments

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம்(23) உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்தார். உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]

மத்திய கிழக்கு

புனித நகரமான பெத்லகேமில் நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள்

  • December 24, 2023
  • 0 Comments

கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரமான பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெத்லகேம் ஒரு பாலஸ்தீனிய நகரமாக ஆளப்படுவதே இதற்குக் காரணம். நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமீபகால வரலாற்றில் பெத்லகேம் நகரில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்திக்கானில் உள்ள புனித […]

ஐரோப்பா

ரஷ்யா பொருளாதார தடை: நிதி நிறுவனங்களை குறிவைக்கும் அமெரிக்கா

ரஷ்ய இராணுவ-தொழில்துறை வளாகத்தை ஆதரிக்கும் நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன, ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதன பின்னர் அதன் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கான ரஷ்யாவின் முயற்சிகளை எளிதாக்கும் நிதி நிறுவனங்களை குறிவைக்கும் அதிகாரத்தை அமெரிக்க கருவூலத் துறைக்கு வழங்குகிறது இந்த உத்தரவு வாஷிங்டனுக்கு கடல் உணவுகள் மற்றும் வைரங்கள் போன்ற சில ரஷ்ய பொருட்களின் இறக்குமதி தடைகளை விரிவுபடுத்தும் திறனை வழங்குகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ரஷ்ய பிரஜை செய்த மோசமான செயல்

ஹபராதுவ பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தமது வாகனத்துக்கு எரிபொருளை பெற்றுக்கொண்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ரஷ்ய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ரஷ்ய பிரஜை, 5 நாட்களுக்கு முன்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருளை பெற்று பணம் செலுத்தாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் ஹபராதுவ காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகைப்பட தொகுப்பு

இலங்கைக் குயில் லாஸ்லியாவா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போய்ட்டாரே….

  • December 24, 2023
  • 0 Comments

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் வரவேற்பை பெற்ற இவர், சில சர்ச்சைகளையும் சந்தித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். முதல் இரண்டு படங்களுமே இவருக்கு கைகொடுக்காத நிலையில் அடுத்ததாக அன்னபூரணி திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் ஜிம் ஒர்கவுட் மூலம் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்து போய் ஆள் அடையாளம் […]

ஆசியா

போரில் உயிரிழக்கும் இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காசா பகுதியில் நடந்த போரில் 13 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது காஸாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் மொத்த எண்ணிக்கையை 152 என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதனர். மற்றும் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 85% மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

இலங்கை

ஜா-எலயில் கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல்

ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைப்பதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ரஷ்யா

2023 இல் சுமார் 4.8 மில்லியன் தொழிலாளர்கள் பற்றாக்குறையுடன், குறைந்துபோன தொழிலாளர்களின் காரணமாக ரஷ்யா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பிரச்சனை 2024 இல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி, கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிக ஊழியர்களை ஈர்ப்பதற்காக நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்தி வருகின்றன. அடுத்த ஆண்டும் இந்த பற்றாக்குறை தொடரும், இதனால் தொழிற்சாலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழில்கள் பாதிக்கப்படும் […]