அறிவியல் & தொழில்நுட்பம்

அரசியல் விளம்பரங்களை அனுமதிப்பது தொடர்பில் ட்விட்டர் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்!

2019 ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மீது அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து ஏராளாமான மாற்றங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக 2024 ம் ஆண்டு முதல் X (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் மீண்டும் அரசியல் விளம்பரங்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது : சுதந்திரமான […]

ஐரோப்பா

தொழிநுட்ப கோளாறுக்கு நம்பகமற்ற விமானத் தரவுகளே காரணம் – NATS

  • August 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு நம்பகமற்ற  விமானத் தரவுகளே காரணம் என்று இங்கிலாந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் கூறியுள்ளார். நேஷனல் ஏர் டிராஃபிக் சர்வீசஸ் (NATS) இன் தலைமை நிர்வாகி மார்ட்டின் ரோல்ஃப், ஆரம்ப விசாரணையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தோல்வியானது அதன் அமைப்பு புரியாதமையினாலும், விளக்கம் செய்ய முடியாதமையினாலும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பிரச்சனை பற்றிய ஆரம்ப விசாரணைகள், இது நாங்கள் பெற்ற சில விமானத் தரவுகளுடன் […]

இந்தியா

உணவு பதப்படுத்தல் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – ஐவர் பலி!

  • August 30, 2023
  • 0 Comments

மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் தனிலா பகுதியில் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். இது குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயக்கமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண்னொருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த பெண் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இன்று காலை கட்டுநாயக்கவில் இருந்து சென்னை நோக்கி பயணிக்க முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கற்களின் எடை 2311.75 கிராம் என தெரியவந்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் சந்தை பெறுமதி 29.1 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க […]

இலங்கை

மட்டக்களப்பு- நாட்டில் மழை பெய்ய வேண்டி விசேட தொழுகை

  • August 30, 2023
  • 0 Comments

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீங்கி மழை பெய்யவேண்டுமென ஆசிக்கும் விசேட தொழுகையும் பிரார்த்தனையும் இன்று (30) மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்றன. ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மௌலவி எல்எச். அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தினார். இதையடுத்து கூட்டுப்பிரசங்கம் நடைபெற்றது. உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏஎல். சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார். மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள் , […]

பொழுதுபோக்கு

அனிருத்துடன் காதல் தோல்வி.. கமலுடன் இரகசிய உறவு? ஆண்ட்ரியா பற்றி அறிந்திடாத தகவல்

  • August 30, 2023
  • 0 Comments

பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் ஆண்ட்ரியா. பல படங்களில் பாடல் பாடி வந்த இவர் “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது ஆண்ட்ரியா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் சினிமா வாழக்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா பிரபல இசையமைபாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து கேரியரில் […]

பொழுதுபோக்கு

குடித்து மட்டையான சீரியல் நடிகை.. கார் டிரைவருடன் செய்த வேலை..

  • August 30, 2023
  • 0 Comments

சின்னத்திரை சீரியல் நடிகையாகிய அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தவர் தான் அந்த பப்ளி நடிகை. கிழக்கு கடற்கரை சாலையில் பார்ட்டிக்காக பப்பில் குடித்துவிட்டு, போதையில் கார் டிரைவருடம் பெரிய சம்பவத்தை செய்திருக்கிறார் அந்த நடிகை. பார்ட்டி செய்வது முதல் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது வரை ஏகப்பட்ட விசயங்களை சாதாரணமாக நடிகைகள் செய்து வருகிறார்கள். அப்படித்தான் அந்த நடிகை ஈசிஆர் பப்பில் குடித்துவிட்டு நள்ளிரவு 1 மணிக்கு தள்ளாடியபடி போதையில் காருகு திரும்பி சென்றிருக்கிறார். நிலை தடுமாறி இருந்த நடிகையை கார் […]

உலகம்

இன்றிரவு வானில் தென்படவுள்ள சுப்பர் ப்ளு மூன் என்னும் அரிய நிகழ்வு ..

  • August 30, 2023
  • 0 Comments

நீல நிலவு எனப்படும் சுப்பர் ப்ளு மூன் அரிய நிகழ்வு இன்றிரவு வானில் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை பொதுமக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என பொறியியல்துறை விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். ஒரே மாதத்தில் 2 முறை பௌர்ணமி தினம் வரும் போது இரண்டாவதாக வரும் முழு நிலவை ப்ளு மூன் என்ற நீல நிலவு என குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதுடன் இன்று வானில் தென்படவுள்ளதாக […]

வட அமெரிக்கா

கனடாவில் அடையானம் காணப்பட்டுள்ள புதிய வகை கோவிட் திரிபு..!

  • August 30, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிஏ 2.86 என்னும் புதிய வகை கோவிட் திரிபு முதல் தடவையாக கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்றாக இந்த கோவிட் திரிபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்று முதல் தடவையாக கனடாவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த திரிபின் வீரியம் மற்றும் […]

ஐரோப்பா

பிரிகோஜினின் மரணம் குறித்து சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்படாது – ரஷ்யா!

  • August 30, 2023
  • 0 Comments

வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் பிரிகோஜினின் மரணம் தொடர்பில் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமளிக்கப்படாது என ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு  விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில்  வாக்னர் குழுவினர் பெரும்பாலான வெற்றிகளை ரஷ்யாவிற்கு தேடி தந்துள்ளனர். போரில் இவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது. இதற்கிடையே போரில் ஈடுபட தேவையான ஆயுதங்களை […]

You cannot copy content of this page

Skip to content