இலங்கை செய்தி

மத ஸ்தலங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களை பாதுகாக்க விசேட திட்டம்!! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

  • August 30, 2023
  • 0 Comments

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் தொல்பொருள் இடங்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மல்வத்து – அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்காண் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமயப் பிரச்சினைகள் குறித்து ஆராய அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்களின் தலைமையில் குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இக்கட்டான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாரிய பங்களிப்பை ஆற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் […]

பொழுதுபோக்கு

அனிரூத் பாட.. ஷாருக்கான் ஆட்டம் போட.. ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் மாஸ் வீடியோ

  • August 30, 2023
  • 0 Comments

‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிரூத்துடன் நடிகர் ஷாருக்கான் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அட்லி இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’  திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிறப்புத்தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை […]

செய்தி வட அமெரிக்கா

ஆயுத விற்பனைக்கு எதிராக வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

  • August 30, 2023
  • 0 Comments

பியோங்யாங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் நடத்தும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்பதற்கு எதிராக வடகொரியாவை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே சாத்தியமான ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். “ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தவும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று பியோங்யாங் செய்துள்ள பொது உறுதிமொழிகளுக்குக் கீழ்ப்படியும்படி DPRK […]

ஆசியா செய்தி

இம்ரான் கானின் சிறைக் காவல் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

  • August 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறைக் காவலை 14 நாட்களுக்கு நீட்டித்து, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டதாக பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்தது. சிறப்பு நீதிமன்றம் அட்டாக் சிறையில் நடவடிக்கைகளை நடத்தியது, அங்கு திரு கான் ஆகஸ்ட் 5 அன்று சட்டவிரோதமாக அரசு பரிசுகளை விற்ற குற்றத்திற்காக மூன்று ஆண்டு சிறைத்தண்டனையைத் தொடங்கினார். ஒரு உயர் நீதிமன்றம் செவ்வாயன்று அந்த தண்டனையை இடைநிறுத்தி, திரு கானை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது, ஆனால் உத்தியோகபூர்வ ரகசிய வழக்கில் […]

இலங்கை செய்தி

சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் கொமர்ஷல் வங்கி கிளை ஊழியர்களால் சுத்திகரிப்பு

  • August 30, 2023
  • 0 Comments

கொமர்ஷல் வங்கி கிளிநொச்சி கிளையானது மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் மிகவும் பிரமாண்டமான முறையில் சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கொமர்ஷல் வங்கி வட பிராந்திய முகாமையாளர் சிவஞானம், கொமர்ஷல் வங்கி, கிளிநொச்சி கிளை முகாமையாளர் சஞ்சீவ், மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட மற்றும் கடல் சார் […]

ஆப்பிரிக்கா செய்தி

காபோனில் இராணுவ சதிப்புரட்சி – வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜனாதிபதி

  • August 30, 2023
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தேர்தல்களைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆப்பிரிக்க மாநிலமான காபோனில் உள்ள கிளர்ச்சி அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்தனர். 64 வயதான அலி போங்கோ, காபோனை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அவரது குடும்பம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது மற்றும் அவரது மகன்களில் ஒருவர் தேசத்துரோக குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்று ஆட்சிக்கவிழ்ப்பு […]

பொழுதுபோக்கு

தான் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்த நடிகர்! ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்

சந்திரமுகி -2, ஜிகர்தண்டா – 2, திரைப்படங்கள் முடிவடைந்துள்ள நிலையில் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் காமாட்சி அம்மன் கோவிலில் மற்றும் சங்கர மடம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார், தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் காஞ்சனா போன்ற பேய் படங்களில் நடித்து இயக்கி வெற்றி திரைப்படங்களை தந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் சந்திரமுகி 2 […]

விளையாட்டு

உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்த ஜோகோவிச்

  • August 30, 2023
  • 0 Comments

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் […]

உலகம்

நண்டுகளை அழிப்பதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கிய நாடு! என்ன காரணம் தெரியுமா?

இத்தாலி நாட்டில் தற்போது நீல நிற நண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்ப காலத்தில் இத்தாலியில் ஒன்றிரண்டு என நீல நண்டுகள் இருந்த நிலையில், தற்போது அதன் நிலை மாறி, பல கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு இது காரணமாகி விட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் நீல நிற நண்டு இனத்தை சமாளிக்க இத்தாலி அரசாங்கம் அவசர அவசரமாக பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியுள்ளது. இந்த நீல நண்டு இனம் மேற்கு அட்லாண்டிகில் தோன்றி, […]

இலங்கை

தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தை! இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தையானது நேற்று (29) நடாத்தப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தொழில் சந்தையினை மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சேவை துறை, விருந்தினர் விடுதி, தனியார் வைத்தியசாலை , நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றிய ஆலோசனைகள் போன்ற துறைகளுக்கான நேர்முக […]

You cannot copy content of this page

Skip to content