சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை; குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம்
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஈராக்கை மையமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தினர் சிரியாவை பாதுகாத்து வருகிறார்கள். இதனால் ஐ.எஸ். இயக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியும், ராணுவ அறிவை பகிர்ந்துகொண்டும் அமெரிக்க ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. இதில் அமெரிக்க ராணுவத்தின் உதவியை சிரிய ஜனநாயகப்படை இயக்கமும், நாட்டில் உள்ள அரபு பழங்குடியினரும் அதிக அளவில் பெறுகிறார்கள். இருவேறு கொள்கைகளை கொண்ட இரு கும்பல்களுக்குள் அவ்வப்போது மோதல் போக்கு நிலவி […]