உலகம்

பேருந்தில் மோதிய அதிவேக ரயில்! 7 பேர் பலி

தென் அமெரிக்காவின் சிலியில் பஸ் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ரயில்வே கிராசிங்கில் இந்த விபத்து நடந்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு 14 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்நகரின் அருகே உள்ள ரயில்வே தண்டவாள கிராசிங்கை பஸ் கடக்க முயற்சித்தது. அப்போது, வேகமாக வந்த ரயில் பஸ் மீது மோதியது. மேலும், தண்டவாளத்தை […]

இந்தியா

5 மாத பெண் குழந்தைக்கு பாலில் விஷம்… சித்தி செய்த கொடூரம்!

  • September 2, 2023
  • 0 Comments

கர்நாடகாவில் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5மாத பெண் குழந்தையை விஷம் வைத்து கொன்ற 4 பிள்ளைகளின் தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது, சொத்து பறிபோகும் என்பதால் குழந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது.ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு […]

இலங்கை

இலங்கை மின்சார சபை முக்கிய அறிவித்தல்!

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேப்பர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார கட்டண பட்டியலை பேப்பரில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதால் அனைவரையும் ஈமெயில் மூலமாக மாதாந்த மின்சார கட்டண பட்டியலை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.. அதன்படி இரு முறைகளில் உங்களால் மின்சார கட்டண பட்டியலை ஈமெயிலில் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள முடியும்.. முறை 1 – sms ஊடாக பதிவு செய்தல். “EBILL” <space> Account […]

இலங்கை

திருகோணமலையில் நாளைய தின ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்த நீதிமன்றம் !

  • September 2, 2023
  • 0 Comments

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தயிருந்த நிலையில் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. திருகோணமலை பெரியகுளம் சந்தியில் நாளைய தினம் (03) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் […]

பொழுதுபோக்கு

அந்த 7 நாட்களால் எம்.ஜி.ஆர் மூலம் வந்த சிக்கல்… வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை

  • September 2, 2023
  • 0 Comments

80களில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. இவர், தமிழ் , கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, பிரபு, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அம்பிகா குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு காணாமல் போனார். அவர் குறித்து டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். குடும்பபாங்கான முகம் கொண்ட அம்பிகா ஒரு சாதாரண படத்தில் தான் தமிழில் அறிமுகம் […]

தமிழ்நாடு

‘ஆதித்யா L1’ ஒரு முட்டாள்தனம்; காயத்ரி ரகுராம் ட்வீட்

  • September 2, 2023
  • 0 Comments

சில காரணங்களால் ஆதித்யா L1 -யை முற்றிலும் முட்டாள்தனமாக உணர்கிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக கூறியுள்ளார். தொடர்ந்து விண்வெளித்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இஸ்ரோ, சூரியனின் வெளிப்புறப்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று நண்பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு, பல பாராட்டுக்கள் குவிந்துவரும் நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து பேசியுள்ளார்.இது […]

இலங்கை

வவுனியாவில் குடைசாய்ந்த உழவு இயந்திரம் – சிறுவன் பலி!

  • September 2, 2023
  • 0 Comments

வவுனியா – பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. இதன்போது, உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் ஐந்து பேர் பயணித்த நிலையில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 வயதான சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் […]

இலங்கை

மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படும் அபாயம்! சி.கா.செந்தில்வேல்

எதிர்வரும் காலத்தில் நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட உள்ளது. அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிச்சயமாக நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட சாத்தியம் உள்ளது. வரிசை ஏற்படும் அபாயம் தற்பொழுது தலைதூக்க வழி கோருகின்றது என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.. இந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் […]

ஐரோப்பா

குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • September 2, 2023
  • 0 Comments

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று (02.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக  ஜேர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 142 கிமீ (88 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜேர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இலங்கை

கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே நேற்று (01) கரடி தாக்கியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிசார் […]

You cannot copy content of this page

Skip to content