ஆஸ்திரேலிய மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்
சிட்னியைச் சுற்றியுள்ள பல கடற்கரைகள் மாசுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேகரிக்கப்பட்ட பல்வேறு கழிவுகள் கரையோரக் கடற்பரப்பில் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, சிட்னியைச் சுற்றியுள்ள சுமார் இருபது கடற்கரைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரை பரிசோதித்ததில், அந்த நீரில் பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால், கடலில் உள்ள தண்ணீரைத் தொடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.