ஐரோப்பா

ஜேர்மனின் ஒரு திட்டத்தை பிரான்ஸில் பின்பற்ற விருப்பம் தெரிவித்துள்ள மேக்ரான்

  • September 5, 2023
  • 0 Comments

ஜேர்மனி வழங்கும் குறைந்த கட்டண ரயில் திட்டம் போன்றதொரு திட்டத்தை பிரான்சிலும் அமுல்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜேர்மனி தொடர்ச்சியாக பல்வேறு குறைந்த கட்டண ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது.ஜேர்மனி 49 யூரோக்கள் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், வெறும் 10 யூரோ பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அதுவும் அமோக வரவேற்பைப் பெற்றது. ரயிலில் பயணக்கட்டணம் குறைவாக இருப்பதால், பலர் தங்கள் வாகனங்களை விட்டு […]

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு..! வீடியோ வெளியிட்ட சகோதரன்

  • September 5, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம், திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொள்வதாக […]

ஆசியா

ஹாங்காங்கில் ஒரே பாலின ஜோடிகளுக்கு மாற்று சட்ட கட்டமைப்பு…

  • September 5, 2023
  • 0 Comments

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர் ஜிம்மி ஷாம் (36). ஜனநாயகம் மற்றும் LGBTQ உரிமை ஆர்வலரான இவர் தனது ஓரினச் சேர்க்கை பார்ட்னரை 2013ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் தனது திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். 2018ல் கீழ் நீதிமன்றங்களில் இரண்டு முறை வழக்கில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாமின் மேல்முறையீட்டுக்கு ஓரளவு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க […]

உலகம்

எலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! தந்தை அச்சம்

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலகின் நம்பர் 1 பில்லியனருமான எலோன் மஸ்க் தனது பிரமாண்டமான திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் தனியார் ஸ்பேஸ் ஷட்டில் ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல முக்கிய நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் மஸ்க், கடந்த ஆண்டு உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரையும் சுமார் ரூ.37,000 கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார். “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என […]

இலங்கை

வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

  • September 5, 2023
  • 0 Comments

வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் இன்று (05.09) பொது நிதிக் குழுவிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்படி, தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

இங்கிலாந்தில் ஆசையாக ஆடர் செய்த காளான் சூப்பில் எட்டிப்பார்த்த எலி!

  • September 5, 2023
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என கூறி காதலருக்கு கொடுத்திருக்கிறார். காதலரும் ஆசையாக சூப்பை வாங்கி பருகியுள்ளார். 3ல் இரண்டு பங்கு சூப் உள்ளே போனதும் சூப்பில் ஏதோ ஒன்று நகர்ந்து சென்று உள்ளது. இதனை கவனித்த சாம், முதலில் அது ஒரு பெரிய […]

பொழுதுபோக்கு

“கோடான கோடி”க்கு 15 ஆண்டுகள்… கொண்டாடிய குழுவினர்

  • September 5, 2023
  • 0 Comments

முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சரோஜா’. இப்படத்தில் வைபவ், பிரகாஷ் ராஜ், எஸ்.பி.சரண், பிரேம் ஜி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்ஷன், காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் ‘கோடான கோடி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி இன்று வரையிலும் மக்களை […]

இலங்கை

இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு!

  • September 5, 2023
  • 0 Comments

எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பல நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைக்கு சமூகமளிக்காத அவர், இது குறித்து எவ்வித அறிவித்தலும் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசேட வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலைமை எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு […]

இந்தியா

இந்தியாவிற்கு பதிலாக பாரதம்:வெடித்த சர்ச்சை

G20 உச்சி மாநாடு எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், G20 மாநாட்டிற்கான விருந்துபசார அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிடப்பட்டுள்ளமை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக […]

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை!

  • September 5, 2023
  • 0 Comments

கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (05.09) அமர்வில்  கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய கர்தினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள […]

You cannot copy content of this page

Skip to content