செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கான நிதி உதவி திட்டத்தை நிறுத்தும் அமெரிக்கா

  • January 24, 2024
  • 0 Comments

2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை “சிறப்பு ராணுவ நடவடிக்கை” எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன் புற்றுநோய் […]

ஆசியா செய்தி

சர்ச்சையில் சிக்கியுள்ள 2024 மிஸ் ஜப்பான் பட்டம் வென்ற மாடல் அழகி

  • January 24, 2024
  • 0 Comments

உக்ரைனில் பிறந்த ஜப்பானிய மாடல் அழகி, மிஸ் ஜப்பான் 2024 பட்டத்தை வென்று சர்ச்சையைக் கிளப்பியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் ஐச்சி மாகாணத்தின் நகோயாவைச் சேர்ந்த 26 வயது கரோலினா ஷினோ வெற்றி பெற்றார். போட்டியில் வென்ற முதல் ஜப்பானிய குடிமகன் என்ற பெருமையை பெற்றார். அவரது தாயார் ஜப்பானிய மனிதருடன் மறுமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, திருமதி ஷினோ ஐந்து வயதாக இருந்தபோது ஜப்பானுக்கு குடிபெயர்ந்தார். அவர் “பேச்சு மற்றும் மனதில்” தன்னை […]

ஐரோப்பா

ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு?

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கிய இராணுவ விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கா அல்லது ஜெர்மன் ஏவுகணைகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானத்தில் 74 பேர் இருந்ததாகவும், இதில் 65 உக்ரேனிய போர்க் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெகுஜன ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்று உக்ரேனிய அரசாங்க அமைப்பான போர்க் கைதிகளின் […]

விளையாட்டு

BBL13 – சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட்

  • January 24, 2024
  • 0 Comments

பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர். சிட்னி அணி சார்பில் சீன் அபாட் […]

இலங்கை

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் வழக்கு : ​7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • January 24, 2024
  • 0 Comments

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைதாகியுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஶ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேரும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது.

ஐரோப்பா

உக்ரைனில் இத்தாலி அதிகாரி கொலை: ரஷ்யா குற்றச்சாட்டு : நிராகரித்த இத்தாலி

உக்ரைனில் இத்தாலிய இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் என்ற ரஷ்ய கூற்றை இத்தாலி மறுத்துள்ளது , இது உளவியல் போருக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போலிச் செய்தி என்றும் கூறியுள்ளது. காஸ்டிக்லியா உக்ரைனில் இறந்து கிடந்ததாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுபதிவு செய்ததை அடுத்து, லெப்டினன்ட் கர்னல் கிளாடியோ காஸ்டிக்லியா இயற்கை காரணங்களுக்காக இத்தாலியில் இறந்ததாக இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

பொழுதுபோக்கு

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!

  • January 24, 2024
  • 0 Comments

உச்சக்கட்டக் கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்துள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘பஹீரா’, ‘தி லெஜெண்ட்’ படங்களின் மூலம் பிரபலமானார். இவர் நடிக்கும் படங்களை விட சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்குதான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு அசத்தினார் யாஷிகா. […]

தமிழ்நாடு

சேலம்-நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் விழுந்த பாமக MLA!

  • January 24, 2024
  • 0 Comments

நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் பாமக எம்.எல்.ஏ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக எம்.எல்.ஏ அருள் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த திமுக தரப்பினர் எம்.எல்.ஏ அருளை மிதிவண்டி கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் மாணவர்கள் முன்பே வாக்குவாதத்தில் […]

பொழுதுபோக்கு

பிரபல இயக்குனருடன் இரண்டாம் திருமணமா? குழப்பத்தில் ரச்சிதாவின் ரசிகர்கள்

  • January 24, 2024
  • 0 Comments

சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த தினேஷ் – ரச்சிதா சில தனிப்பட்ட காரணத்தால் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட தினேஷ், அவரது மனைவி ரச்சிதா உடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஆனால், தினேஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்கிற வகையில் ரச்சிதாவின் பதிவுகள் இருந்தது. இந்நிலையில் ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் சோசியல் […]

ஐரோப்பா

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பாதிக்கப்படும் கடல்சார் வணிகம் … ஐ.நா-வில் இந்திய துணை நிரந்தர பிரதிநிதி கவலை

  • January 24, 2024
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதல் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வணிகம், இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாக பாதிக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாகவும், பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவைக் தெரிவிக்கும் வகையிலும் செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் காரணமாக […]