சிவகங்கை மாவட்டத்தில் ஐவரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை!
காளையார்கோயில் அருகே வீடு புகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி விட்டு மர்மநபர்கள் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன், மருமகள் அரசி(38). பேரன் ஜோவின்(12), பேத்தி செர்லின்(15) ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு […]