செய்தி வட அமெரிக்கா

புளோரிடாவில் கடற்கரை தெருவில் நிர்வாணமாக நடந்த நபர் – கைது செய்த பொலிஸார்!

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள பாம் கடற்கரை தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அமெரிக்கா நாட்டின் புளோரிடா மாகாணத்திலுள்ள பாம் கடற்கரை தெருவில் சுமித்(44) என்ற நபர் உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகச் சாலையில் நடந்து சென்றுள்ளார்.இதனைப் பார்த்த மக்கள் அச்சத்தில் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர். அதன் பின் அந்த நபரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பாம் பீச் காவல்துறையில் அந்த நபரை பொலிஸார் விசாரிக்கையில் அவர் தன்னை பற்றி […]

செய்தி வட அமெரிக்கா

எலிகள் மூலம் மீண்டும் கொரானா பரவும் அபாயம்; ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகள் கொரானா தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் சொசைட்டி பார் மைக்ரோபயாலஜியின் இதழில் வெளியான அறிக்கையில் நியூயார்க் நகரின் எலிகள் மூன்று விதமான கொரானா தொற்றால் பாதிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் 9ம் திகதி வெளியான அறிக்கையில் அமெரிக்க நகரிலுள்ள எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரானா வைரஸ் எலிகளுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன. […]

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவில் காணாமல் போன மூன்று பெண்கள்!

மெக்சிகோவிற்கு பயணம் செய்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று பெண்களும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெனிடாஸிலிருந்து பெப்ரவரி 24 ஆம் திகதி மெக்சிகோவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த மூவரும் சுமார் இருவாரங்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி டோரா அலிசியா செர்வாண்டஸ் சான்ஸ் என்ற 53 வயதுடைய பெண்ணும், மரினா பெரெஸ் ரியோஸ் என்ற 48 வயதுடைய பெண்ணும், மரிட்சா என்ற 47 வயதுடைய பெண்ணும் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து […]

செய்தி வட அமெரிக்கா

கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸார்; கனடாவில் அரங்கேறிய சம்பவம்!

கனடாவில் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து பொலிஸார் பணம் கொள்ளையிட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்தின் அடிப்படையில் பொலிஸார் அவரது வீட்டை சோதனையிட்டுள்ளனர்.சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து போதைப் பொருட்கள், மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.எனினும், மீட்கப்பட்ட மொத்த பணத்தையும் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. றொரன்டோ பொலிஸார் சுமார் 6000 டொலர் […]

செய்தி வட அமெரிக்கா

அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: பொலிஸாரின் அதிரடி!

ஸ்கார்பரோ மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் கிங்ஸ்டன் சாலை அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரொறன்ரோ பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மீட்டுள்ளதாகவும், ஆனால் முதலுதவி அளிக்கும் போதே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைதாகியுள்ளதாகவும், ஆனால் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க பிரபல வங்கி திவால்! இறுதி அத்தியாயத்தை நோக்கி நகரும் செயற்பாடுகள்

அமெரிக்காவின் 160 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள வங்கி திவாலாகியுள்ளது. சிலிக்கான் வேலி எனப்படும் வங்கி திவால் ஆனதால் அந்த வங்கி சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் சிலிக்கான் வேலி வங்கி அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்பட்டது என்றும் அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அமெரிக்காவை சேர்ந்த FDIC தெரிவித்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சி பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அத்தகைய பெரிய வங்கிச் சரிவு […]

செய்தி வட அமெரிக்கா

டொராண்டோவில் விருந்து மண்டபத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் பலி

டொராண்டோ நகரின் வடக்கு முனையில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இரவு 9:30 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலை 427 மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள தொழிற்துறை வளாகத்திற்கு டொராண்டோ பொலிசார் அழைக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து  வன்முறை சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் காணவில்லை. ஆனால் யாரோ ஒருவர் உயிருக்கு ஆபத்தான கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றதை […]

செய்தி வட அமெரிக்கா

மூன்று வருடங்களில் 365 பவுண்டுகள் எடையை குறைத்த அமெரிக்க நபர்

அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள ஒரு நபர், நீண்ட காலம் வாழமாட்டார் என்று வைத்தியர் கூறிய பின்னர் நான்கு வருடங்களில் 365 பவுண்டுகள் (தோராயமாக 165 கிலோ) எடையை குறைத்துள்ளார். 300 கிலோ எடையுள்ள அவர்,நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற உந்துதலுடன் கடுமையான எடை இழப்புக்கு உட்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் கிராஃப்ட் தனது எடை இழப்பு பயணத்தை 2019 இல் தொடங்கினார், அப்போது அவர் உணவுக் கட்டுப்பாடு மூலம் முதல் மாதத்தில் சுமார் 18 கிலோவைக் […]

செய்தி வட அமெரிக்கா

துணி விற்க எல்லை தாண்டிய 3 பெண்கள் மாயம்: இன்னும் புலப்படாத மர்ம பிண்னனி!

டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட மூன்று பெண்கள் மெக்சிகோவில் கடந்த மாதம் துணிகளை விற்க எல்லையைத் தாண்டிய நிலையில் தற்போது அவர் மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் நான்கு அமெரிக்க ஆண்களை கடத்தியதாக கடந்த வாரம் காணொளி ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அந்த விவகாரம் உரிய அதிகாரிகளால் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.ஆனால் மூன்று பெண்கள், கடந்த இரண்டு வாரமாக மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் நிலை மர்மமாகவே உள்ளதுடன், அதிகாரிகள் தரப்பில் எந்த […]

செய்தி வட அமெரிக்கா

கனடா விதித்துள்ள புதிய தடை: ரஷ்யாவிற்கு விழுந்த பயங்கர அடி!

ரஷ்யாவிலிருந்து அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யாவுக்கு நிதியளிக்கக்கூடிய வர்த்தகத்திற்கு மறுபு தெரிவிக்க கனடா தீர்மானித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அனைத்து ரஷ்ய அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது. உக்ரைன் இந்தப் போரை வெல்ல முடியும் மற்றும் வெல்ல வேண்டும். புடினின் சட்டவிரோத மற்றும் காட்டுமிராண்டித்தனமான உக்ரைன் படையெடுப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் வருவாயைக் குறைக்க அல்லது தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் […]

You cannot copy content of this page

Skip to content