செய்தி தமிழ்நாடு

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு

  • April 25, 2023
  • 0 Comments

கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ் புரத்தில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது இளைய மகன் மேத்யூ உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாடு திரும்பி உள்ளார். இந்தியா திரும்பிய அவர், உக்ரைனில் நாடு திரும்ப முடியாமல் இருந்த […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது – பந்துல குணவர்த்தன!

  • April 25, 2023
  • 0 Comments

சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கினை சிங்கப்பூரில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் இ- ட்ரீயோ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் சரக்கு வாகன ஷோரூம் கோவையில் துவக்கம்

  • April 25, 2023
  • 0 Comments

ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான இ-ட்ரீயோ, கோவையை சேர்ந்த ஈக்ரீன் பிளானட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் அதன் முதல் எலக்ட்ரிக் சரக்கு வாகன ஷோரூமை கோவையில் இன்று துவக்கியது. இதை கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். அமேசான், பிளிப்கார்ட், டி.எட்ச்.எல் ,போன்ற முன்னணி இ-காம் லாஜிஸ்டிக் நிறுவனங்களுக்கு சரக்கு மின்சார வாகனங்களை வழங்கி வரும் இ- ட்ரீயோ நிறுவனம் அதன் […]

செய்தி தமிழ்நாடு

சர்வதேச பருத்தி கவுன்சில் அமெரிக்கா கருத்தரங்கம்

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்க பருத்தி மூலம் உச்ச செயல்திறனை அடைதல்” எனும் தலைப்பில் சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.முன்னதாக இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதில் தெற்காசியாவிற்கான காட்டன் யு.எஸ்.ஏ சப்ளை சர்வதேச பருத்தி கவுன்சில் இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப், சுபிமா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ், இந்திய மற்றும் இலங்கைக்கான சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பீஷ் நரங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.உலக அளவில் பருத்தியின் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • April 25, 2023
  • 0 Comments

2023 இல் இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உக்ரைனுக்கான 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி உக்ரைனுக்கு 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன்டர் லயன் தெரிவித்துள்ளார். நாங்கள் உக்ரைனுக்கு எங்கள் வருடாந்திர மேக்ரோ-நிதி உதவி தொகுப்பின் கீழ் மற்றொரு 1.5 பில்லியன் யூரோக்களை வழங்குகிறோம் எனத் தெரிவித்த அவர்,  ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், அதன் நிறுவனங்கள் மற்றும் […]

செய்தி தமிழ்நாடு

முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்

  • April 25, 2023
  • 0 Comments

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் கார்த்திக் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மகனுமான மதுரை அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக் குடும்ப பிரச்சனை காரணமாக கையை. கத்தியால் அறுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜி.ஆர் கார்த்திக்கின் உடலானது […]

செய்தி தமிழ்நாடு

போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பேருந்து

  • April 25, 2023
  • 0 Comments

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் வேலை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.கவுண்டம்பாளையம் பாலம் வேலை நிறைவடைந்து தற்போது மக்கள் பயன்படுத்தி வர கூடிய சூழலில் அடுத்ததாக ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.பாலத்தின் இருபுறங்களில் உள்ள ரோடுகள் சிறிய அளவில் உள்ளதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து செல்லக்கூடிய நிலையை காணப்படுகிறது.அதேபோல காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து இருக்கக்கூடிய காட்சிகளையும் அந்த பகுதியில் நம்மால் […]

செய்தி தமிழ்நாடு

சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • April 25, 2023
  • 0 Comments

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு, கட்சியினர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் […]

ஆப்பிரிக்கா ஐரோப்பா

சூடானில் சிக்கியிருந்த 138 உக்ரேனியர்கள் மீட்பு!

  • April 25, 2023
  • 0 Comments

சூடானில் சிக்கியிருந்த 138 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 35 பெண்கள், 12 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தமிழ்நாடு

அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய தகுதி ஈபிஎஸ் அணியினருக்கு கிடையாது

  • April 25, 2023
  • 0 Comments

அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய தகுதி ஈபிஎஸ் அணியினருக்கு கிடையாது… அமலன் சாம்ராஜ் பிரபாகர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பேட்டி… புரட்சித் தலைவரையும் புரட்சி தலைவி அம்மாவையும் சுவாசிக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கொடியையும் பயன்படுத்த உரிமை உள்ளது அது மட்டும் அல்லாமல் எந்த நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இதற்கு தடை விதிக்கவில்லை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் […]

You cannot copy content of this page

Skip to content