இந்தியா – காதல் திருமணம் செய்த ஜோடியைக் கலப்பையில் பூட்டி துன்புறுத்திய கிராமவாசிகள்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியைச் சிலர் மாடுகளைப் போலக் கலப்பையில் கட்டி வைத்து வயலை உழ வைத்துத் துன்புறுத்தியுள்ளனர். கஞ்சமாஜிரா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம் ஜோடி அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டது.இருப்பினும், அந்தத் திருமணத்தைச் சில கிராமவாசிகள் எதிர்த்தனர். தங்கள் சமூக வழக்கப்படி இது பொருந்தா திருமணம் எனக் கூறிய கிராமவாசிகள் சிலர் அந்தத் தம்பதியைக் கலப்பையில் பூட்டி உழச்செய்ததோடு, பிரம்பால் தாக்கவும் செய்துள்ளனர்.பின்னர், […]