ஆசியா

ஜப்பானில் ரயிலை நிறுத்திய பாம்பு – அதிவேக ரயில் சேவைக்கு ஏற்பட்ட பாதிப்பு

  • May 2, 2025
  • 0 Comments

ஜப்பானின் மிகப் பரபரப்பான அதிவேக ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. பாம்பு ஒன்று மின்சார விநியோகக் கம்பிவடத்தில் சிக்கிக்கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை சுமார் 5.25 மணிக்குத் டோக்கியோவுக்கும் ஒசாகாவிற்கும் இடையே ஓடும் அதிவேக ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இரவு 7 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடர்ந்துள்ளது. அதிகாரிகள் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயணிகள் ரயில் நிலையத்தில் கூடியதாகக் கூறப்படுகிறது. ரயில் நுழைவுச்சீட்டுகளைப் பெறும் இயந்திரங்களிலும் நீண்ட […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சீன உளவாளி

  • May 2, 2025
  • 0 Comments

உளவு சட்டம், தரவு தனியுரிமைச் சட்டம் மற்றும் சைபர் குற்றத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக ஒரு சீன நாட்டவரைக் கைது செய்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மணிலாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பிரதான அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் கண்காணிப்பு உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சந்தேக நபர் மக்காவ்வில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருந்தார், அது அவரை தக் ஹோய் லாவோ என்று அடையாளம் காட்டியது. சந்தேக நபரின் […]

இலங்கை

மீண்டெழும் இலங்கையின் பொருளாதாரம் – ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

  • May 2, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் 1,242 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இறக்குமதி செலவு 1,637 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 8.6 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களின் […]

வட அமெரிக்கா

துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப் தோற்றத்தை வரைந்த ஓவியர் – பரிசாக வழங்கிய புட்டின்

  • May 2, 2025
  • 0 Comments

தேர்தல் நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப் தோற்றத்தை ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப் தனது கையை உயர்த்தி நின்றதை ஓவியமாக ரஷ்ய கலைஞர் ஒருவர் வரைந்துள்ளார். தனது ஓவியம் ரஷ்ய ஜனாதிபதி புதின் மூலம் டிரம்புக்கு பரிசாக அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஓவியத்தை சிறிது காலத்திற்கு வைத்திருக்க விரும்புவதாக சிலர் அணுகி இலவசமாக பெற்றுச் சென்றாக ஓவியக் கலைஞர் கூறினார். ஊடகம் மூலமே அமெரிக்க தூதரகம் வாயிலாக டிரம்புக்கு […]

செய்தி

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று – மருத்துவர் எச்சரிக்கை

  • May 2, 2025
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடனான வானிலையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதெனவும், காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமன் உள்ளிட்டவை இதற்கான அறிகுறிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்புளுவென்ஸா A மற்றும் இன்புளுவென்ஸா B வைரஸ் பரவல் இந்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குளிர்ச்சியான நாடுகளில் காணப்படும் இன்புளுவென்ஸா A வைரஸ் தொற்று அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ஹங்கேரியில் நாய்களுக்கான நடை பயணம் : நூற்றுக்கணக்கான டச்ஷ்ணட்ஸுடன் கலமிறங்கிய உரிமையாளர்கள்!

  • May 2, 2025
  • 0 Comments

ஹங்கேரியில் நூற்றுக்கணக்கான டச்ஷண்ட் நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் புடாபெஸ்ட் நகர பூங்காவில் நடை பயணத்தில் போட்டியிட்டுள்ளனர். ஹங்கேரிய ரெக்கார்ட்ஸ் சங்கத்தின் கண்காணிப்பின் கீழ், குட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நீண்ட ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஹங்கேரியில் மிகப்பெரிய ஒற்றை இன நாய் நடைப்பயணத்திற்கான புதிய சாதனையை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டது. ஹங்கேரிய ரெக்கார்ட்ஸ் சங்கத்தின் பதிவாளரும் தலைவருமான இஸ்த்வான் செபஸ்டியன், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை துல்லியமாக எண்ணுவதில் உள்ள சவாலை ஒப்புக்கொண்டார். ஜெர்மனியில் முதலில் வளர்க்கப்படும் டச்ஷண்டுகள், […]

வாழ்வியல்

Mood Disorder தீர்வு என்ன?

  • May 2, 2025
  • 0 Comments

மனம், உணர்வுகளால் ஆன அற்புதப் பெட்டகம். அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மனம் சலனம் அடைந்துகொண்டே இருக்கிறது. ஆனந்தத்தில் கொண்டாடித் திளைப்பதும், துன்பத்தில் உழன்று, மறுகுவதும் நம் சுபாவம். இப்படி, சம்பவங்களுக்கு ஏற்ப எதிர்வினை செய்யும் வரை நம் மனநிலையில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென மிகவும் சோர்வாக இருப்பார்கள். வேறு சிலரோ அதீத உற்சாகமாக இருப்பார்கள். இப்படி இயல்பற்ற […]

ஆசியா

ஜப்பான் பேரரசர் குடும்பத்தினரிடம் இருந்து 3.6 மில்லியன் யென் பணத்தை திருடிய இளைஞர்!

  • May 2, 2025
  • 0 Comments

ஜப்பானில் உள்ள இம்பீரியல் அரண்மனை, பேரரசர் நருஹிட்டோ மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக மொத்தம் 3.6 மில்லியன் யென் ($24,900) பணத்தை திருடியதற்காக ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது. இம்பீரியல் வீட்டு நிறுவனம் சந்தேக நபரை 20 வயதுடைய ஒரு ஊழியர் என்றும், நருஹிட்டோ மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரண்மனை அல்லது ஏஜென்சி கட்டிடத்திற்கு நியமிக்கப்பட்ட சுமார் 80 உதவியாளர்களில் அவரும் ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் […]

உலகம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்ற தயாராகும் மருத்துவர்கள்

  • May 2, 2025
  • 0 Comments

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு புரட்சிகரமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைக் குறைக்கக்கூடிய நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ப்ரேசர் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சேனி தாமஸ் தலைமையிலான இந்த பரிசோதனை மருந்து, கணைய செல்களிலிருந்து பெறப்பட்ட ஆன்டிஜெனுடன் வைட்டமின் டி-யை இணைத்து, தடுப்பூசி போல தோலில் செலுத்தப்படுகிறது. 130,000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இந்த நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் […]

விளையாட்டு

முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறியது; ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வா?

  • May 2, 2025
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறிய நிலையில் ஐபிஎல்லில் இருந்து தோனி பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 49 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இதுவரை மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 8 போட்டிகளில் தோல்வியடைந்து […]