செய்தி விளையாட்டு

SLvsBAN – இலங்கை அணிக்கு 178 ஓட்டங்கள் இலக்கு

  • July 13, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணிக்கு 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் அணித்தலைவர் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், ஷமீம் ஹொசைன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பினுர பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும் நுவான் துஷார மற்றும் மஷீஷ் தீக்‌ஷன ஆகியோர் […]

உலகம்

தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்வெளியில் ஏவியது இஸ்ரேல்

  • July 13, 2025
  • 0 Comments

இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை, அரசு நடத்தும் நிறுவனமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸால் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட டிரார்-1 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்வெளியில் ஏவியது, இது IAI மற்றும் இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் (ISA) வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளின்படி தெரிவிக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது அடுத்த 15 ஆண்டுகளுக்கு வழக்கமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளின் […]

பொழுதுபோக்கு

“இவங்கதான் லேடி சூப்பர்ஸ்டார்” கமல்ஹாசன் அதிரடி பேச்சு… அப்போ நயன் யாரு?

  • July 13, 2025
  • 0 Comments

நடிகை நயன்தாரா இன்று சினிமாவில் எந்த நடிகையும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகையாகாது. தற்போது அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு திரையுலகத்தில் மேலோங்கி நிற்கிறார். நிறைய ஹிட் படங்களை கொடுத்து, நிறைய முன்னணி நடிகர்களுடன் நடித்து அதே இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். தற்போது கமல்ஹாசன் ஒரு விழாவில் பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா அவர்களுக்கு அவார்டு கொடுக்கும் போது, வைஜயந்தி மாலா அவர்களை இந்திய அளவில் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் எனக்கு […]

இந்தியா

டெல்லியில் நடைபாதையில் உறங்கியவர்கள் மீது ஏறிச்சென்ற சொகுசு கார்: சிறுமி உட்பட ஐவர் காயம்

  • July 13, 2025
  • 0 Comments

தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த புதன்கிழமை ஜூலை 9) நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது. நள்ளிரவு 1.45 மணி அளவில் வசந்த் விஹாரின் ஷிவா கேம்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது ஆவ்டி சொகுசு கார் பாய்ந்ததில் அவர்கள் அனைவரும் காயமடைந்தனர். இரண்டு தம்பதியினரும் எட்டு வயது சிறுமியும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கூலி வேலை செய்வதற்காக டெல்லி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 08 பேர் கைது!

  • July 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை […]

பொழுதுபோக்கு

அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

  • July 13, 2025
  • 0 Comments

அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் இயக்கவிருக்கிறார். இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அட்லீ அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில், வில்லனாக வில் ஸ்மித் அல்லது ட்வைன் ஜான்சன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் AA22 × A6 திரைப்படத்தில் தாத்தா வேடத்தில் அனில் கபூர் அல்லது பங்கஜ் […]

ஐரோப்பா

பிரான்சில் சக கைதியின் விடுதலையை பயன்படுத்தி தப்பிச்சென்ற கைதி!

  • July 13, 2025
  • 0 Comments

பிரெஞ்சு சிறையிலிருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். தென்கிழக்கு பிரான்சில் உள்ள லியோன்-கோர்பாஸ் சிறையிலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து சிறைச்சாலை சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக கைதியின் விடுதலையைப் பயன்படுத்தி அவர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பியோடிய கைதி பல தண்டனைகளை அனுபவித்து வருவதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒரு வழக்கில் விசாரணையில் இருப்பதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட அமெரிக்கா

அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளின் சோதனையின்போது வேளாண் ஊழியர் ஒருவர் மரணம்

  • July 13, 2025
  • 0 Comments

அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின்போது காயமடைந்த ஒரு வேளாண் ஊழியர் உயிரிழந்ததாக அவரது குடுபத்தினர் (ஜூலை 12) கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட கஞ்சாத் தோட்டத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கள்ளக் குடியேற்றத்துக்கு எதிரான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிர்ம்பின் முடிவுக்கு ஏற்ப இம்மாதம் 10ஆம் திகதி வேளாண் நிலங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஆவணமில்லாத 200 குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது. உயிரிழந்த வேளாண் ஊழியரின் குடும்பம் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இங்கிலாந்தில் உச்சம் தொட்ட வெப்பநிலை : அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

  • July 13, 2025
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் வெப்பமான வானிலை தொடரும், இந்த ஆண்டு மூன்றாவது வெப்ப அலையின் உச்சத்தை நாடு கடந்து செல்லும்போது அதிகபட்சமாக 31C ஆக இருக்கும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிட்லாண்ட்ஸ், தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் திங்கட்கிழமை 9:00 மணி வரை அம்பர் வெப்ப சுகாதார எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய அனைத்தும் இதுவரை ஆண்டின் மிக வெப்பமான நாளைப் பதிவு செய்தன, அதே நேரத்தில் இங்கிலாந்து ஹியர்ஃபோர்ட்ஷையரின் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் – ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

  • July 13, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் பெண் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 62 வயதான அந்த மூதாட்டி, அவரது 22 வயது மகளுடன் “ஆபத்தான” நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கும் குறைவான தீவிர காயங்கள் ஏற்பட்டன. நான்கு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே அவருக்கு CPR அளிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மதியம் 12.30 மணியளவில் வலென்சியாவில் உள்ள பிரபலமான மெரினாவான மெரினா ரியல் ஜுவான் கார்லோஸ் I அருகே நடந்தது. […]

Skip to content