இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி – பிரதமரின் தீபாவளி வாழ்த்து!

  • October 31, 2024
  • 0 Comments

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தைப் பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப்பேச்சுகள், வன்முறைகள் என்பதை […]

ஆசியா செய்தி

சீனாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அதிஷ்டம்

  • October 31, 2024
  • 0 Comments

சீனாவில் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை சீன அறிவித்துள்ளது. சரிந்துவரும் மக்கள் தொகையை அதிகரிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குழந்தைப்பேறு மானியம், பராமரிப்பு சேவை, மகப்பேறு விடுமுறை, மருத்துவ வசதி, காப்பீடு, கல்வி, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, வருமான வரிச் சலுகை என 13 வகையான சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, 2016-ல் இத்திட்டம் […]

உலகம் செய்தி

ட்ரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் – எலோன் மஸ்க் வழங்கிய வாக்குறுதியால் நெருக்கடி

  • October 31, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள எலோன் மஸ்க் சில பெரிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியுமா என்ற சிக்கலை அவரது வணிக பதிவுகள் எழுப்புவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளை ஏதாவது ஒரு அரசாங்கத்தில் ஒன்றாகக் கொண்டுவருவது குறித்து மஸ்க் மற்றும் டிரம்ப் இருவரும் பகிரங்கமாக விவாதித்துள்ளனர். எலோன் மஸ்க் தனது அரசாங்கத்தின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மொழி கற்றால் வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு

  • October 31, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜெர்மனியில் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், தொழில்நுட்பம், தாதி மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வெளிநாட்டவர்களுக்கு அதிக விசா வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜெர்மனி பொருளாதார நிறுவனம் கூறுவதன்படி, நாடுமுழுவதும் 5,70,000 பணியிடங்கள் உள்ளன. “இந்த ஸ்டேட்டர்ஜிக் கூட்டணியில் திறன் சார் தொழிலாளர்களின் இடப்பெயர்வு முக்கியமானது. IT பொறியாளர்கள் முதல் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் வரை பல […]

இலங்கை செய்தி

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவல் வேகம் – கடுமையாகும் சட்டம்

  • October 31, 2024
  • 0 Comments

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவல் வேகமடைந்துள்ளதாக இலங்கை கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பந்தப்பட்ட நோய்த்தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக அதிகாரிகள் செயற்பட்டிருந்தால் இந்த பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி இருக்கலாம் என சங்கத்தின் உறுப்பினர் ஜெயலத் பாலசூரிய தெரிவித்தார். இதேவேளை, தங்களது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஏதேனும் நோய் காணப்பட்டால் உடனடியாக கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு […]

ஆசியா செய்தி

அரசாங்கத்திற்கு மிரட்டல் விடுத்த இம்ரான் கானின் கட்சி

  • October 30, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தவறாக நடத்துவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுவதைத் தொடர்ந்தால், அரசாங்கத்திலிருந்து விடுபட நாடு தழுவிய பணிநிறுத்தம் நடத்தப்படும் என்று பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சி மிரட்டியுள்ளது. வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவின் முதலமைச்சரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் மூத்த தலைவருமான அலி அமின் கந்தாபூர், மத்திய அரசுக்கும், பஞ்சாப் மாகாண அரசுக்கும் “எச்சரிக்கை” விடுத்தார். “இம்ரான் கானுக்கு உணவு வழங்கப்படவில்லை. அவரது செல்லின் […]

உலகம் செய்தி

பெங்களூரு வந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்

  • October 30, 2024
  • 0 Comments

பிரிட்டன் மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் புத்தாக்க சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளனர். சார்லஸ் தம்பதி பெங்களூரு சவுக்யா சர்வதேச சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். தனிப்பட்ட பயணம் என்பதால், இது பற்றிய தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. யோகா பயிற்சி, புத்தாக்கப்பயிற்சி ஆகியவை இந்த மையத்தில் அரச குடும்ப தம்பதிக்கு அளிக்கப்படுகிறது. மையத்தில் வாக்கிங் செல்லும் தம்பதி, மற்ற நேரத்தில் இயற்கை வேளாண்மை வயல்களிலும், கால்நடை பண்ணையிலும் நேரத்தை செலவழிக்கின்றனர். டாக்டர் ஜான் மத்தாய் […]

செய்தி விளையாட்டு

ICC தரவரிசையில் பும்ராவை பின்னுக்கு தள்ளிய தென் ஆப்பிரிக்க வீரர்

  • October 30, 2024
  • 0 Comments

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் ரபாடா படைத்தார். இதனால் 860 புள்ளிகளுடன் ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

வேலை நிறுத்தத்தை கைவிட்ட இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

  • October 30, 2024
  • 0 Comments

ரயில் நிலைய அதிபர்கள் இன்று தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று மாலை 4.30 மணி முதல் அனைத்து பயணச்சீட்டு கடமைகளிலிருந்தும் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர் எவ்வாறாயினும், புகையிரத சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்புப் […]

இந்தியா செய்தி

டெல்லியில் தீபாவளிக்கு அலங்காரம் செய்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி

  • October 30, 2024
  • 0 Comments

அலங்கார மின் விளக்குகளில் இருந்து மின்சாரம் தாக்கி 5 வயது குழந்தை உயிரிழந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். டெல்லி முகுந்த்பூரில் உள்ள ராதா விஹாரில் வசிக்கும் இறந்தவரின் தந்தை சந்தோஷின் அறிக்கையின்படி, அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், இறந்த மகன் அவரது இளைய மகன் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தனது வீட்டு உரிமையாளர் சர்ஜூர் ஷா வீட்டின் கூரையில் வீட்டை அலங்கரிக்க மின் விளக்குகளை பொருத்தினார். “அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் 5 வயதுடைய தனது இளைய […]