பொழுதுபோக்கு

தீபாவளி ரேஸில் முதலிடத்தில் SK… ஜெயம் ரவிய கூட ஓரங்கட்டடியாச்சி…

  • October 31, 2024
  • 0 Comments

நடிகர் சிவகார்த்தில்கேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகின்ற அதேநேரத்தில் கவனிக்கத்தகுந்த நடிகராக உள்ளார். இவரது படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றாலே தியேட்டருக்கு குடும்ப ரசிகர்கள் வருவார்கள் என நம்பலாம். இதுவரை இவரது படங்களில் கோரமான சண்டைக் காட்சிகளோ அல்லது ஆபாச காட்சிகளோ இடம் பெற்றதில்லை. மேலும் சிவகார்த்திகேயன் இதுவரை தனது படங்களில் ஒரு காட்சியில் கூட புகைப்பிடிப்பதைப்போல் நடிக்கவில்லை. இப்படியான விஷயங்களும் குடும்ப ரசிகர்கள் இவரது படத்திற்கு அதிகம் வர காரணம். இப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் தமிழ் […]

மத்திய கிழக்கு

எகிப்த்தில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கடத்திய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

எகிப்து பிரதேசத்தில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கடத்திய ஆளில்லா விமானத்தை புதன்கிழமை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் நடந்த போரின் போது, ​​பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், எகிப்தின் சினாய் பகுதிக்குள் சுரங்கப் பாதைகளை பயன்படுத்தி ஆயுதங்களை கடத்தியதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்து பல ஆண்டுகளுக்கு முன்பு காசாவுக்குச் செல்லும் சுரங்கப்பாதை வலையமைப்புகளை அழித்ததாகவும், கடத்தலைத் தடுக்கும் ஒரு இடையக மண்டலம் மற்றும் எல்லைக் கோட்டைகளை உருவாக்கியதாகவும் கூறுகிறது. முன்னதாக அக்டோபரில், துப்பாக்கிகள் […]

இலங்கை

இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருத்து வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

  • October 31, 2024
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகியோரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்ட போது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் பொலிஸார் […]

ஐரோப்பா

ஜெர்மனிய கைதிக்கு மரண தண்டனை: மூன்று ஈரானிய தூதரகங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ள ஜேர்மன்

  • October 31, 2024
  • 0 Comments

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு திங்கிட்கிழமை ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதனால் ஜெர்மனியில் உள்ள மூன்று தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. 69 வயதாகும் ஷர்மத் அமெரிக்காவில் வசித்து வந்தார். துபாய்க்கு கடந்த 2020ம் ஆண்டு சென்றபோது ஈரான் பாதுகாப்புப்படையினரால் கடத்தப்பட்டார். 2023ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற விசாரணையின் ஜெர்மனி அமெரிக்கா, சர்வதேச உரிமைகள் குழுக்களின் வாதங்கள் பொய்யானவை என நீதிமன்றத்தால் புறக்கணிப்பட்டது. அதன் அடிப்படையில் மரண தண்டனை […]

இலங்கை

இலங்கை: பாலியல் துஷ்பிரயோகம் செய்த துறவிக்கு 07 வருட சிறைத்தண்டனை

சிறுவயது பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் நீதிமன்றம் குற்றவாளிக்கு ரூ.4500 அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 100,000 இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் நேற்று (30) இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது

வட அமெரிக்கா

பைடனின் கருத்தை எதிர்த்து குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்த ட்ரம்ப்!

  • October 31, 2024
  • 0 Comments

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லாரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது ஆதரவாளர்களை குப்பைகள் என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார். குடியரசு கட்சி சார்பில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், தனது பெயரை தாங்கிய போயிங் 757 ரக விமானத்தில் இருந்து தரையிறங்கினார். உடனடியாக வெள்ளை நிறத்தில் அவரது பெயருடன் தயாராக இருந்த குப்பை வண்டியில் பயணித்தார். இதன் மூலம் ஜோ […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைப்பு!

  • October 31, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 319 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மற்ற வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என பெற்றோலிய சட்டரீதியான கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உலகம்

தென் சீனக் கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க சீனாவை வலியுறுத்தும் வியட்நாம்

தென் சீனக் கடலில் உள்ள பரசல் தீவுகளில் வியட்நாம் மீனவர்கள் மற்றும் மீன்பிடிக் கப்பல்களை சீனா தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று வியட்நாம் சீனாவை வலியுறுத்தியது, செய்தித் தொடர்பாளர் ஒரு வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார், எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்கள் எப்போது தடுத்து வைக்கப்பட்டனர் […]

இலங்கை

இலங்கை: மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு!

  • October 31, 2024
  • 0 Comments

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒருவரின் ஆலோசனையை தாம் ஒருபோதும் பெறமாட்டேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையான ‘மக்கள் ஆணையை’ புரிந்து கொள்ளாத ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க […]

உலகம்

விரைவில் கையெழுத்திடப்படும் ஈரானுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம்! அச்சத்தில் மேற்கு நாடுகள்

ரஷ்யாவும் ஈரானும் விரைவில் கையெழுத்திட உத்தேசித்துள்ள ஒப்பந்தம், நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். ஈரானும் இஸ்ரேலும் மத்திய கிழக்கில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை பரிமாறிக் கொள்ளும்போது, ​​​​ரஷ்யா உக்ரைனில் போரை நடத்துவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மேற்கு நாடுகளுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன. “ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு விரிவான மூலோபாய கூட்டு ஒப்பந்தம் தயாராகி வருகிறது, இது ரஷ்ய-ஈரானிய உறவுகளை வலுப்படுத்த […]