பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் பலி
பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளந்தாவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், அதைத் தொடர்ந்து வைஷாலியில் 4 பேர், பங்கா மற்றும் பாட்னாவில் தலா இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஷேக்புரா, நவாடா, ஜெகனாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், […]