செய்தி விளையாட்டு

IPL Update – அடுத்த வருட தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

  • November 2, 2024
  • 0 Comments

18வது IPL கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் IPL நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி IPLலில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர […]

இலங்கை செய்தி

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக சுனில் ஜயரத்ன நியமனம்

  • November 2, 2024
  • 0 Comments

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின்(CAA) தலைவராக தசுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். CAA இன் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் சுங்கத் திணைக்களத்தில் சுங்கத்தின் கூடுதல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்தார். சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட அவர், கடந்த 3½ வருடங்களாக ஊடகப் பேச்சாளராகவும் இருந்துள்ளார். கூடுதலாக, ஜயரத்ன ஒரு அங்கீகாரம் பெற்ற நிபுணர் பயிற்சியாளர்/தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆலோசகர் ஆவார். உலக வர்த்தக அமைப்பின் (ஜெனீவா) வர்த்தக வசதி […]

ஆசியா செய்தி

வடக்கு காசாவில் மீண்டும் ஆரம்பமான போலியோ தடுப்பூசி பிரச்சாரம்

  • November 2, 2024
  • 0 Comments

இரண்டு கட்ட போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தின் இறுதிக் கட்டம் வடக்கு காசாவில் தொடங்கியது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. தீவிர இஸ்ரேலிய குண்டுவீச்சுகள், பாரிய இடப்பெயர்வு மற்றும் பிராந்தியத்தில் அணுகல் இல்லாமை போன்ற காரணங்களால் இரண்டாவது கட்டம் அக்டோபர் மாதம் ஐ.நா முகமைகளால் ஒத்திவைக்கப்பட்டது. காசா 25 ஆண்டுகளில் அதன் முதல் போலியோ நோயை ஆகஸ்ட் மாதம் பதிவு செய்தது, இது ஒரு ஆண் குழந்தையை முடக்கி, திட்டத்தை செயல்படுத்தத் தூண்டியது. 15 ஐ.நா. […]

இலங்கை செய்தி

அறுகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது

  • November 2, 2024
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என கிடைத்த புலனாய்வு தகவல் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் […]

மத்திய கிழக்கு

பயங்கரவாதத்தையும், அச்சுறுத்தலையும் வேரறுப்போம்: துருக்கி அதிபர் சபதம்

‘நம் நாட்டிற்கு எதிராக நிலவும் பயங்கரவாதத்தையும், அச்சுறுத்தலையும் வேரறுப்போம்” என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் நடந்த ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ வீரர்களிடையே பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். துருக்கி தலைநகர் அங்காராவில் செயல்பட்டு வரும் ராணுவ தொழிற்சாலையில் விமானப்படைக்கு சொந்தமான விமான உதிரிபாகங்கள், டிரோன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கெமி படேனோக் தெரிவு

  • November 2, 2024
  • 0 Comments

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. அதே சமயம், தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி, 1832ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி […]

பொழுதுபோக்கு

கூலி ரிலீஸ் அப்டேட்… போட்டுடைத்தார் லோகேஷ்

  • November 2, 2024
  • 0 Comments

வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகிவரும் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷுடன் ரஜினிகாந்த் முதன்முறையாக இணைந்திருப்பதாலும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே […]

இந்தியா செய்தி

மேற்கு வங்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் பலி

  • November 2, 2024
  • 0 Comments

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தன. மூன்று குழந்தைகளின் (9 வயது, 4 வயது மற்றும் 2.5 வயது) கருகிய உடல்கள் மீட்கப்பட்டு மேலதிக மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹவுராவின் பிரதேச தீயணைப்பு அதிகாரி ரஞ்சன் குமார் கோஷ் […]

ஆசியா செய்தி

ஹெஸ்பொல்லாவின் உயர்மட்ட கடற்படை தளபதி கைது

  • November 2, 2024
  • 0 Comments

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் […]

இலங்கை

மியன்மாரில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்கான மற்றுமொரு நடவடிக்கை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இணைய மோசடிகளுக்கு எதிராக இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், மியன்மாரில் உள்ள இலங்கை பிரஜைகளை மீட்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, தேசிய ஆராய்ச்சி மற்றும் கூட்டாண்மை அதிகாரி மாதவி என் குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.