ஐரோப்பா

பிரித்தானியாவில் பெண்களை கவர்ந்துள்ள குழந்தை பொம்மைகள்!

  • November 3, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிதாக பிறந்த குழந்தைகள் போலவே தோற்றமளிக்கும் பொம்மைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. சிலர் இவ்வாறான பொம்மைகளை £20,000 கொடுத்து கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பொம்மைகள் பெரும்பாலும் உண்மையான குழந்தைகள் போலவே தோற்றமளிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான பொம்மைகள் குழந்தைகள் இன்றி தவிக்கும் பெண்களுக்கு உறுதுணையாக இருப்பதாக வடிமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை

இலங்கை – அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

  • November 3, 2024
  • 0 Comments

அஸ்வசும சமூக நலப் பயன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். பாடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார். அஸ்வசும சமூக நல உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளுக்கு உரித்துடையவர்கள் தொடர்பில் உள்ளுர் […]

இந்தியா

துபாயிலிருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தோட்டாக்கள் மீட்பு

  • November 3, 2024
  • 0 Comments

துபாயிலிருந்து புதுடெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் பேச்சாளர் சனிக்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தார். அக்டோபர் 27ஆம் திகதி புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா ஏஐ916 விமானத்தில் ஒரு பையில் அத்தோட்டாக்கள் இருந்ததாகவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு இறங்கியபிறகு நடத்திய சோதனையில் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் விமான நிலையக் காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக […]

இலங்கை

இலங்கையில் அரச – தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

  • November 3, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் 4 மணிநேரம் என்றும், சம்பளம் பிடித்தம் செய்யாமல் […]

மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

  • November 3, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா இராணுவ பலத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட தூரம் சென்று குண்டுகளை வீசக்கூடிய போர் விமானம், ஏவுகணைகளை அழிக்க உதவும் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றையும் அமெரிக்கா அவ்வட்டாரத்தில் குவித்து வருகிறது. ஈரான்- இஸ்ரேல் இடையே கடுமையான போர் நிலவுகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஒன்று மற்றொன்றின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க தற்போது தனது படை பலத்தை அதிகரித்துள்ளது. ஈரானும் அதன் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு நெருக்கடி – குடியேற்ற சட்டத்தை கடுமையாக்க கோரிக்கை

  • November 3, 2024
  • 0 Comments

கனடா போன்று ஜெர்மனியிலும் கட்டுக்கடங்காத வகையில் அகதிகள் உள்நுழைந்துள்ளமையால் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இதனால் ஜெர்மனியில் நடைமுறையிலுள்ள குடியேற்ற சட்டத்தை மாற்றியமைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு அகதிகளின் வன்முறை சம்பவங்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனிய மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளதுடன், வெளிநாட்டு அகதிகளை வெறுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு அகதிகளை நாட்டுக்குள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் குடியேற்ற சட்டங்களை […]

அறிந்திருக்க வேண்டியவை

பறக்கும் தட்டுகளை கைப்பற்றிய அமெரிக்கா? கசிந்த இரகசியம்

  • November 3, 2024
  • 0 Comments

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளைப் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அது வெளியிடப்படும் என இந்த நீண்ட நாள் மர்மங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசாவின் தொடர்புடையாளர் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட் தெரிவித்துள்ளார். இவர் பேசியதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதம் ஏலியன் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததாகவும், அதில் பூமியில் மனிதர்கள் போலவே ஏலியனும் மறைந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாகத் தான் எலியனைக் கண்காணிக்கப் பூமிக்கு […]

ஆசியா

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 200,000 பேரை வீட்டைவிட்டு வெளியேற உத்தரவு

  • November 3, 2024
  • 0 Comments

ஜப்பானில் வீடுகளைவிட்டு வெளியேறுமாறு 200,000 பேரை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாட்டின் மேற்கு வட்டாரத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. Kong-rey புயல் காரணமாக மேற்கு வட்டாரத்தில் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் கூறியது. இதையடுத்து மட்சுயாமா (Matsuyama) நகரில் உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு 10 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 200, 000 பேரை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அது கட்டாயம் […]

உலகம்

எண்ணெய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஈராக் எடுத்துள்ள தீர்மானம்

  • November 3, 2024
  • 0 Comments

ஈராக் தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைத்துள்ளது. ஈரானின் எண்ணெய் உற்பத்தித் துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ள இராக், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 3.3 மில்லியன் (33 லட்சம்) பேரல்கள் அளவுக்கு குறைத்து, உள்நாட்டு பயன்பாட்டையும் குறைத்திருப்பதாக ஈராக் எண்ணெய் உற்பத்தித் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி அளவு ஒரு நாளைக்கு சராசரியாக 3.43 மில்லியன் […]

செய்தி

ஐபிஎல் 2025 : கைவிட்ட கொல்கத்தா அணி… கவலையில் வெங்கடேஷ் ஐயர்!

  • November 3, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், ஒவ்வொரு அணியில் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடந்து முடிந்த சீசனில் அணிக்கு முக்கிய வீரராக இருந்த அல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் பெயர் இல்லாதது […]