டிரம்ப்பிற்கு வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கால் வீக்கத்தை ஏற்படுத்தும் நரம்புக் கோளாறு
நரம்புப் பிரச்சினை காரணமாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இடது கால் கீழ்ப் பகுதியில் வீக்கமும் வலது கையில் தடிப்பும் ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தது. டிரம்ப்பின் கணுக்கால்கள் வீங்கியிருந்ததையும் அவர் கையில் ஏற்பட்ட தடிப்புகள் ஒப்பனையால் மறைக்கப்பட்டிருந்ததையும் காட்டும் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை இத்தகவலை வெளியிட்டது. அவ்விரு பிரச்சினைகளும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் கேரொலின் லீவிட், செய்தியாளர் கூட்டத்தின்போது டிரம்ப்பின் மருத்துவர் தந்த […]