செய்தி

இலங்கையில் சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு!

  • November 5, 2024
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வருடம் ஒன்றிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி கடந்த முதலாம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இந்தநிலையில், அந்த வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

செய்தி

நாள் முழுவதும் ஆற்றலை வழங்கும் முக்கிய காலை உணவுகள்…!

  • November 5, 2024
  • 0 Comments

நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்க: காலையில் எழுந்தவுடன் பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்வது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபடவும் நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்கவும், உங்கள் டயட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவுகளை தேர்வு செய்வதன் மூலம் , பலவீனம் மற்றும் சோர்வு பிரச்சனையை பெருமளவில் அகற்றலாம். அதோடு, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை உட்கொள்வதால், ஆற்றல் அபரிமிதமாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சிறுவனுக்கு ஆபத்தாக மாறிய ஆடை

  • November 5, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் 12 வயது சிறுவன் அணிந்திருந்த ஆடையால் உடலில் தீப்பிடித்ததால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான செய்தி பதிவாகியுள்ளது. தீயினால் பாலியஸ்டர் குதிப்பவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி 8 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தின் பின்னர், காயமடைந்த குழந்தையின் பெற்றோரும் குழந்தைகளின் உடைகளில் ஆபத்தான நிலைமைகள் குறித்து தெரிவித்துள்ளனர். வெளிப்புறத் தோற்றத்திற்காக மட்டுமல்லாமல், உடனடி தீ பாதுகாப்புக்காகவும், குறிப்பாக குழந்தைகளுக்கு, லேபிள்களை சரிபார்க்க மற்ற பெற்றோருக்கு அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்போது அவர் அணிந்திருந்த ஆடையில் எரியக்கூடிய […]

இலங்கை செய்தி

இலங்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை

  • November 5, 2024
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும், கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும், ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • November 5, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்சப்பில் பல அப்டேட்டுகளை கொண்டு வந்து பயனர்களை மெட்டா கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே, வாட்ஸ்அப்பில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் AI தொழிநுட்பம் வசதியைக் கொண்டு வந்தது. அதன்பிறகு, நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு பார்ப்பவர்கள் லைக்குகள் போடும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது நமது சேட்டிங்கை தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு அதனைத் தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற வகையில் வசதி ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் […]

விளையாட்டு

இந்த 4 பேர் வேண்டாம் – பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் முடிவு?

  • November 5, 2024
  • 0 Comments

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியைச் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்து சாதனைப் படைத்தது நியூஸிலாந்து அணி. இந்த தொடர் தோல்வியின் மூலம் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் […]

வட அமெரிக்கா

உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று

  • November 5, 2024
  • 0 Comments

உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்தியுள்ளார். இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஜனாதிபதி யாா் என்பதை முடிவு செய்யும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடொன்றில் பாரிய தீவிபத்து – நாயால் காத்திருந்த அதிர்ச்சி

  • November 5, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் கெண்ட் பகுதியில் இருக்கும் வீட்டில் நாயொன்று தீயை மூட்டியதாக நம்பப்படுகிறது. தீச்சம்பவத்திலிருந்து ஹெர்பி (Herbie) எனும் நாயுடன் 12 வயதுச் சிறுவனும் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் வீட்டிலிருக்கும் பூனையைத் தீயணைப்பாளர்கள் மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹெர்பி தற்செயலாக வீட்டில் இருந்த Toaster எனும் மின்சாதனத்தை முடுக்கியதால் தீ மூண்டது என்று நம்பப்படுகிறது. வீட்டிலுள்ள புகை எச்சரிக்கை முறை வழி சிறுவனுக்குத் தீ குறித்து தகவல் கிடைத்தது. பூனை, பிராணவாயு வழங்கப்படும் முகக்கவசம் வழி உயிர்ப்பிக்கப்பட்டது. கடந்த […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

  • November 5, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பொது ஊதிய வளர்ச்சிக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என சான்சலர் ஓலாப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மன் சமூகம் முழுவதும் ஊதிய உயர்வுகளுடன் தேசிய குறைந்தபட்ச ஊதியம் ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். குறைந்தபட்ச ஊதியம் ஒட்டுமொத்த ஊதியத்துடன் இணைந்து உயர வேண்டும் என ஸ்கோல்ஸ் தனது வாராந்திர வீடியோ செய்தியில் கூறினார். ஜெர்மனியில் ஊதியங்கள் நீண்ட காலமாக இருப்பதை விட சமீப மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளன என்று விளக்கினார். […]

ஆசியா

சிங்கப்பூரில் கணினி மென்பொருள் மூலம் வங்கி மோசடி – பணத்தை இழந்த மக்கள்

  • November 5, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் கணினி மென்பொருளின் (malware) மூலமாக ஒரு கும்பல் வங்கி மோசடிகள் புரிந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த மோசடிகளில் சுமார் 8 மில்லியன் வெள்ளி பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றுக்குத் துணைபுரிந்ததாக நம்பப்படும் ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆபத்தான கணினி மென்பொருளைக் கொண்டு வங்கிக் கணக்குகள் ஊடுருவப்பட்டது குறித்துப் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு ஜூன் 13ஆம், 14ஆம் திகதிகளில் […]