இலங்கை செய்தி

நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு தலா 35 ஆண்டுகள் கடூழிய சிறை

  • November 6, 2024
  • 0 Comments

இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணம். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற […]

செய்தி விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் கேகேஆர் மீது பரபர குற்றச்சாட்டு

  • November 6, 2024
  • 0 Comments

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு ஏலத்திற்கு இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதை கடந்த 31ஆம் திகதி அறிவித்தது. இந்த சூழலில் நடப்பு சாம்பியன் ஆன கே கே ஆர் அணி கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்டார்க் ஆகியோரை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கே கே ஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க், கே கே […]

இலங்கை செய்தி

வைத்தியர் ஷாபி முழுமையாக விடுதலை

  • November 6, 2024
  • 0 Comments

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குருநாகல் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிங்கள பெண்களை கருத்தடை செய்த குற்றச்சாட்டில் தொடர்ப்பட்டு இருந்த இவ்வழக்கில் சாட்சிகள் இல்லை என சட்டமா அதிபர் இன்று உறுதிப்படுத்தியதை அடுத்து நீதவான் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட வழக்கு தீர்ப்பின் போது அவருக்கான தொழில் மற்றும் சம்பள நிலுவைகள் வழங்கப்பட்டன. எனினும் வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகம் செய்தி

விமான நிலையத்தை இலக்குவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்

  • November 6, 2024
  • 0 Comments

இஸ்ரேலின் பென்கூறியன் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இதனால் விமான நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமான சேவை வழமை போல் இடம் பெறுவதாகவும் இஸ்ரேலிய விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி ஒன்றில் இதனால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை செய்தி

சிக்கலில் ரணில்

  • November 6, 2024
  • 0 Comments

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்தமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இது தொடர்பான கொள்வனவுகளை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு தொடர்பில், மனுதாரர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளது. இந்த மனு இன்று (06) முகம்மது லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முனஅனிலையில் விச்ரணைக்கு […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டெல் அவிவில் போராட்டம்

  • November 6, 2024
  • 0 Comments

பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டெல் அவிவில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் பேரணி நடத்தினர். காசாவில் இன்னும் கைதிகளை திருப்பி அனுப்ப பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு அழைப்பு விடுத்தனர். அரசாங்கத்திற்கும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இஸ்ரேலியக் கொடிகளை ஏந்தியபடி கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மையத்தில் கூடினர். போராட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடுத்தனர் மற்றும் டெல் அவிவில் உள்ள அயலோன் நெடுஞ்சாலையில் தீ மூட்டினார்கள். […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க வரலாற்றில் முதல் திருநங்கை மாநில செனட்டர்

  • November 6, 2024
  • 0 Comments

சாரா மெக்பிரைட் குடியரசுக் கட்சியின் ஜான் வேலன் III ஐ தோற்கடித்த பின்னர் டெலாவேரின் முதல் திருநங்கை மாநில செனட்டராக வரலாறு படைத்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை முதல் திருநங்கை மாநில செனட்டர் சாரா மெக்பிரைட் டெலாவேரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முன்னாள் டெலவேர் மாநில போலீஸ் அதிகாரியும், தொழிலதிபருமான குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜான் வேலன் IIIஐ எதிர்த்து வெற்றி பெற்றார். மெக்பிரைட் டெலாவேரின் வில்மிங்டனில் பிறந்து வளர்ந்தார். இளம் வயதிலிருந்தே அரசியல் அவளுக்கு ஆர்வத்தைத் தூண்டியது. […]

இலங்கை செய்தி

தேவாலயத்தில் புதையல் தோண்டிய 13 பேர் கைது

  • November 6, 2024
  • 0 Comments

தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமாபிட்டிகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 13 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். தொம்பே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹெய்யன்துடுவ, சியம்பலாப்பே, தெல்கொட, மல்வானை, இம்புல்கொட, தொம்பே, கேகாலை, ஹோமாகம, கடுவலை, கிரிந்திவெல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை

  • November 6, 2024
  • 0 Comments

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் என்றும் அதன் ஊடாக […]

உலகம் செய்தி

இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

  • November 6, 2024
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து இருதரப்பு விரிவான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விதித்துள்ளனர். சந்திப்பின் போது, ஜெய்சங்கர், அல்பானீஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அமைச்சர் நவம்பர் 3-7 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ” கான்பெராவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை ஆழமாக்குவதற்கான அவரது […]