ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜப்பான் பிரதமர்
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகஸ்ட்டில் பதவி விலகவிருப்பதாக மைனிச்சி நாளேடு ஜூலை 23ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது.இதையடுத்து இஷிபாவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது.மேலவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால் அமெரிக்க வரி விதிப்பு பேச்சுவார்த்தை காரணமாக பதவியில் நீடிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.மேலும் பயனீட்டாளர் விலை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைக் கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அவர் […]