இலங்கை

இலங்கை : தாமரை கோபுரத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

  • November 9, 2024
  • 0 Comments

தாமரை கோபுரத்தில் நேற்று (09.11) துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் இசைக் குழுவுடன் தொடர்புடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி காயமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் இசை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தவர் என்றும், கோபுர நிர்வாகத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் லோட்டஸ் டவர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

அமரனை அமர்க்கலப்படுத்திய ஜிவி பிரகாஷுக்கு S.K கொடுத்த காஸ்ட்லி கிவ்ட்

  • November 9, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் அமரன் படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமைந்துவிட்டது. ரஜினி மற்றும் விஜய்க்கு பிறகு குறுகிய நாளில் 100 கோடி வசூல் செய்த படமாக அமரன் மாறி இருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் சாய்பல்லவி என்றால் அதே அளவுக்கு பாசிட்டிவ் படத்தின் இசை. இந்த படத்தின் வெண்ணிலவு சாரல் நீ மற்றும் மின்னலே போன்ற பாடல்கள் பலரது ரிங்டோனாக மாறியிருக்கிறது. ஜிவி பிரகாஷ் தன்னை சிறந்த ஒரு இசையமைப்பாளராக மீண்டும் ஒருமுறை நிரூபித்து […]

இந்தியா

இந்தியாவில் YouTube பார்த்து போலி பணத்தாள்கள் அச்சிட்ட இருவர் கைது !

  • November 9, 2024
  • 0 Comments

சொந்தமாக அச்சடித்து, ரூ.30,000 மதிப்புள்ள போலி பணத்தாள்களைப் புழக்கத்தில் விட்டது தொடர்பில் இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா என்ற அவ்விருவரும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பத்து ரூபாய் முத்திரைத் தாள்களை வாங்கி, அவற்றைக் கொண்டு கணினி அச்சுப்பொறி மூலம் ரூ.500 போலி பணத்தாள்களை அச்சிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. மிர்சாப்பூரில் அவர்கள் அந்த முத்திரைத் தாள்களை வாங்கினர்.போலி பணத்தாள்கள் அனைத்தும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்ததாகக் காவல்துறை […]

இலங்கை

ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்ட தயாரான ஸ்ரீலங்கன் விமானம் ரத்து!

  • November 9, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (09) நள்ளிரவு 12:30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தை இரத்துச் செய்ய நேரிட்டதாக அதன் தலைவர்  தீபால் பெரேரா தெரிவித்தார். இதன்படி, அவசர தேவையின் அடிப்படையில் பயணிகளை வேறு மாற்று விமானங்களில் அனுப்ப ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. எஞ்சிய […]

ஐரோப்பா

ட்ரம்பின் தெரிவால் நடைபெறவுள்ள நன்மை : ஐரோப்பாவில் நிலவும் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி!

  • November 9, 2024
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் தெரிவானது ரஷ்யாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் வெற்றி உக்ரைனுக்கு உண்மையில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. கசிந்த ஆவணங்கள் ஒரு மென்மையான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் டியர்லோவ் விளாடிமிர் புடின் மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தும் முக்கிய நபராக இருக்கலாம் என்று நம்புகிறார். ட்ரம்பின் நிர்வாகம் உக்ரைனில் ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் […]

தென் அமெரிக்கா

பிரேசிலிய சர்வேச விமான நிலையத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை, இருவர் படுகாயம்

  • November 9, 2024
  • 0 Comments

பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சம்பவம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) பிற்பகலில் நிகழ்ந்தது. சாவ் பாவ்லோ அனைத்துலக விமான நிலையம், அந்நாட்டில் பயணிகளிடையே ஆகப் பரபரப்பாக இருக்கும் விமான நிலையமாகும். கொலைக்குப் பின்னால் உள்ள காரணம் போன்ற விவரங்களை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவ் பாவ்லோ பாதுகாப்பு அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் மேலும் பெண் ஒருவரும் ஆண்கள் இருவரும் காயமுற்றனர். […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தேர்தல் அலுவலகங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

  • November 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மேரிலாந்து, கலிபோர்னியா தேர்தல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பல தேர்தல் அலுவலகங்களில் எஞ்சியிருந்த அஞ்சல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது இந்த கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து அச்சுறுத்தல்களும் ஆதாரமற்றவை என்று ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து மீண்டும் எஞ்சிய வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேரிலாந்தின் மாநில தேர்தல் நிர்வாகியான ஜாரெட் டிமரினிஸ், அச்சுறுத்தல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

ஒன்பது நாட்களில் அமரன் நடத்திய வசூல் வேட்டை

  • November 9, 2024
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கடந்த வாரம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சொல்லப்போனால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம் அமரன் செய்து வருகிறது. இந்த நிலையில் அமரன் படம் […]

ஆசியா

எல்லை பகுதிகளில் அத்துமீறும் வடகொரியா : ஜி.பி.எஸ் சிக்னல்களை சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு!

  • November 9, 2024
  • 0 Comments

வட கொரியா எல்லைப் பகுதிகளில் இருந்து ஜி.பி.எஸ் சிக்னல்களை இரண்டாவது நாளாக சீர்குலைத்ததாக தென் கொரிய இராணுவும் அறிவித்துள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதால், ஆயிரக்கணக்கான பலூன்களைப் பறக்கவிட்டு, தென் கொரிய எதிர்ப்புப் பிரச்சார துண்டுப் பிரசுரங்களை தெற்கில் வீசுவது போன்ற மின்னணு மற்றும் உளவியல் போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஜிபிஎஸ் சிக்னல்களைக் கையாளும் […]

வட அமெரிக்கா

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் ட்ரூடோ

  • November 9, 2024
  • 0 Comments

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் இருப்பதை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். கனடாவில் காலிஸ்தானிய இயக்கத்துக்கு ஆதரவு வழங்குவோர் இருக்கின்றனர் என்று எதிர்பாரா விதமாக ட்ரூடோ கூறினார். எனினும், அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்றும் அவர் உடனடியாக சுட்டினார்.கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் இருக்கும் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ட்ரூடோ அவ்வாறு சொன்னார். காலிஸ்தானிய பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. […]