இலங்கை

இலங்கை வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

  • November 10, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வு குறித்துக் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழு, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள், நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முந்தைய ஒப்பந்தங்களின் அமுலாக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

வாழ்வியல்

தினமும் 20 நிமிடம் நடந்தால் ஏற்படும் நன்மை – ஆய்வில் தகவல்

  • November 10, 2024
  • 0 Comments

பரபரப்பான வாழ்க்கை முறைச் சூழலால் உடல் ஆரோக்கியத்தில் பலரும் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். சிலருக்கு இளம் வயதிலேயே உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவேதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம். அந்தவகையில் 5 நிமிட கூடுதல் உடற்பயிற்சிகூட ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கலாம் என்கிறது சமீபத்தில் ஓர் ஆய்வு. ‘சர்குலேஷன்’ […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் தாக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் – கடும் கோபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி

  • November 10, 2024
  • 0 Comments

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை “யூத மதத்துக்கு மீதான மிகப்பெரிய தாக்குதல் ”என நெதர்லாந்து பிரதமர் Dick Schoof தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், “வரலாற்றில் மிகவும் அவமானகரமான மணிநேரங்கள் அவை. மிகவும் கடுமையான கண்டனங்கள்” என […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட நெருக்கடி – தேர்தல் நடத்த திட்டம்

  • November 10, 2024
  • 0 Comments

ஜெர்மானியில் தேர்தல் நடத்துவது பற்றிய பேச்சுக்குத் தயார் என சான்ஸ்லர் ஓலாப் ஷோல்ஸ் (Olaf Scholz) தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 3 கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. மார்ச் மாதம் தேர்தல் நடத்தத் தயார் என்று பிரதமர் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஜனவரி மாதமே தேர்தல் வேண்டும் என்று கூறுகின்றன. ஜெர்மனி மோசமான பொருளாதார சிரமத்தையும் பதற்றமான உலகத்தையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் புதிய அரசாங்கம் அமைப்பது நல்லது என்று பெரும்பாலான மக்கள் விரும்புவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இளைஞர்கள் மனநிலையில் மாற்றம் – குழந்தை பிறப்பில் சிக்கல்

  • November 10, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபரம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜீன் மாதம் வரையிலான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 392 000 பிள்ளைகள் பிறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் ஜெர்மனியில் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி ஜெர்மனியில் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்.! அறிமுகமாகும் அமைச்சகம்

  • November 10, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யா, மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்துள்ளதுடன், அந்நாட்டின் மக்கள் தொகையும் வேகமாக குறைந்து வருகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலினை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கும், புதிய தம்பதிகளுக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்றவாறு ஊக்கத்தை […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் – அவசரமாக வெளிநாடுகளில் வேலை தேடும் அமெரிக்கர்கள்!

  • November 10, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், ஏராளமான அமெரிக்கர்கள் வெளிநாடுகள் வேலை தேடத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், கூகுள் எனும் தேடுபொறியில், கனடாவுக்குச் செல்ல என்று தேடும் மக்களின் எண்ணிக்கை 1,270 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள் தரவு தெரிவிக்கிறது. இதுபோலவே, நியூசிலாந்துக்குச் செல்ல என்பதை கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் அசத்தல் அம்சம்

  • November 10, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இது போலி செய்திகள், படங்களை கண்டறியும் வகையில் கொண்டு வரப்படுகிறது. வேறு எந்த செயலியும் டவுன்லோடு செய்யாமல் வாட்ஸ்அப் மூலமாகவே செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுகிறது. இது தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. வாட்ஸ்அப்-ல் வரும் படங்களின் உண்மைதன்மையை கண்டறிய இதுஉதவும். ‘Search on web’ என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் சென்று படத்தை கிளிக் செய்யவும். […]

இலங்கை

யாழில் பொலிஸார் அராஜகம் – குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசிய பொலிஸார்

  • November 10, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாங்கள் வீதியால் வந்துகொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று […]

செய்தி விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் பெயரை கொடுத்தற்கான காரணத்தை வெளியிட்ட ஆண்டர்சன்!

  • November 10, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் திகதிதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காகத் தனது பெயரை ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார். 42 வயதான ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி […]