அவுஸ்ரேலிய பிரதமரிடம் மன்னிப்பு கோரிய பைடன்!
குவாட் நாடுகளின் சந்திப்பை இரத்துச்செய்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சிட்னி சந்திப்பில் தன்னால் கலந்துகொள்ள முடியாதமை குறித்து மன்னிப்பு கோருவதாக பைடன் தெரிவித்துள்ளார்.
இங்கு இடம்பெற்ற ஜி7 நாடுகளின் கூட்டத்தின் நெகிழ்ச்சி தன்மையை நான் பாராட்டுகின்றேன் எனபைடன் தெரிவித்துள்ளார்.
நான் அவுஸ்திரேலியாவிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள பைடன் அவுஸ்திரேலிய பிரதமரை அமெரிக்காவிற்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)