நியூஸிலாந்தில் விரைவில் அமுலுக்கு வரும் தடை
நியூஸிலாந்தில் கூடிய விரைவில் மின்-சிகரெட்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளது.
குறைந்த வயதுடையவர்களுக்கு மின்-சிகரெட்டுகளை விற்பனை செய்வோருக்கான அபராதத்தை நியூஸிலாந்து அதிகரிக்க முற்படுகிறது.
18 வயதுக்குக் குறைந்தோர் மின்-சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க அதிகாரிகள் அந்த முடிவை எடுக்கின்றனர். புதிய சட்டத்தின் கீழ் மின்-சிகரெட்டுகளில் இளையர்களைக் கவரும் படங்களை ஒட்டிவைப்பது சட்ட விரோதமாகும்.
ஒரு மாதத்திற்கு முன்பு நியூஸிலாந்து அரசாங்கம் புகையிலையைப் புகைக்கும் பழக்கத்தை நிறுத்தும் திட்டத்தை மீட்டுக்கொண்டது.
அதையடுத்து எழுந்த குறைகூறல்களைத் தொடர்ந்து மின்-சிகரெட்டுகளின் தடையை நியூஸிலாந்து நடைமுறைப்படுத்தவிருக்கிறது.
(Visited 10 times, 1 visits today)